Wednesday, 30 November 2011

Flute

The flute is a musical instrument of the woodwind family. Unlike woodwind instruments with reeds, a flute is an aerophone or reedless wind instrument that produces its sound from the flow of air across an opening. According to the instrument classification of Hornbostel-Sachs, flutes are categorized as edge-blown aerophones.
A musician who plays the flute can be referred to as a flute player, a flautist, a flutist, or less commonly a fluter.
Aside from the voice, flutes are the earliest known musical instruments. A number of flutes dating to about 40,000 to 35,000 years ago have been found in the Swabian Alb region of Germany. These flutes demonstrate that a developed musical tradition existed from the earliest period of modern human presence in Europe.
        
History
The oldest flute ever discovered may be a fragment of the femur of a juvenile cave bear, with two to four holes, found at Divje Babe in Slovenia and dated to about 43,000 years ago. However, this has been disputed. In 2008 another flute dated back to at least 35,000 years ago was discovered in Hohle Fels cave near Ulm, Germany. The five-holed flute has a V-shaped mouthpiece and is made from a vulture wing bone. The researchers involved in the discovery officially published their findings in the journal Nature, in August 2009. The discovery is also the oldest confirmed find of any musical instrument in history.
The flute, one of several found, was found in the Hohle Fels cavern next to the Venus of Hohle Fels and a short distance from the oldest known human carving On announcing the discovery, scientists suggested that the "finds demonstrate the presence of a well-established musical tradition at the time when modern humans colonized Europe". Scientists have also suggested that the discovery of the flute may help to explain "the probable behavioural and cognitive gulf between" Neanderthals and early modern human.
A three-holed flute, 18.7 cm long, made from a mammoth tusk (from the Geißenklösterle cave, near Ulm, in the southern German Swabian Alb and dated to 30,000 to 37,000 years ago) was discovered in 2004, and two flutes made from swan bones excavated a decade earlier (from the same cave in Germany, dated to circa 36,000 years ago) are among the oldest known musical instruments.
Categories of flute
- The Western concert flutes
- The Indian bamboo flute
- The Chinese flute
- The Japanese flute


Tuesday, 29 November 2011

ஜெயமோகன் கேள்வி-பதில்கள்

நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.
தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம்.
நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன். சமயம் வாய்க்கும் போதெல்லாம் சர்ச்சுக்கு செல்கிறேன். ஆனால் சமீப காலமாக என்னுள் சில மாற்றம். சொல்லத் தெரியவில்லை. பிரபஞ்சம் என்றால் என்ன? எப்படி உருவானது? திருமறையில் (பைபிள்) சொல்லக்கூடிய படைப்பின் வரலாறு உண்மை தானா? உண்மையிலேயே சொர்க்கம் என்பது உண்டா? சிந்திக்கத் தொடங்கினேன். விடை தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் சர்ச்சுக்கு சென்று வருகிறேன். நான் அறிந்தும் கேட்டும் வாசித்தும் இருக்கிற இந்து புராணகதைகளும் நம்ப முடியவில்லை. தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகம் வாசித்த பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மொத்தத்தில் எனக்குக் கடவுள் என்ற தத்துவம் உண்டா? என்று வினவத் தோன்றுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் என் மனது சஞ்சலப்படுகிறது. எதையோ தேடுகிறதுபோல் இருக்கும். எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது. நான் திரும்பவும் ஏசுவைப்பிரார்த்திக்கிறேன். பரவசமடைகிறேன்.
இப்பொழுது தாங்கள் ஆன்மீகத்தை வேறுவிதமாகக் கூறிவருவதை கவனித்துவருகிறேன். இன்னும் முழுமையாகப் புரியவில்லை.


நான் ஆன்மீகம் பற்றி பல தளங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். அவற்றை தொடர்ந்து கவனித்து உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளும்போதே நான் சொல்வதென்ன என்பதை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆன்மீக விஷயத்தில் ஏன் இந்தச்சிக்கல் என்றால் நாம் சிறுவயதிலேயே ஆன்மீகம் சார்ந்த பலவற்றை நம்மையறியாமலே கற்று நம்பி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். ஆகவே நாம் புதியதாகக் கற்கும் எதுவும் ஏற்கனவே கற்கப்பட்டவற்றை அழித்து அங்கே தன்னை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சில அடிப்படை விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆன்மீகம், கடவுள், மதம் மூன்றையும் நாம் ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இளமையில் நமக்களிக்கப்படும் சித்திரம் அதுவே. ஆனால் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவற்றைத் தனித்தனியாக வரையறைசெய்துகொள்வதே சரியான புரிதலை உருவாக்கும்.
ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை, மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி. முழுமைநோக்கு அல்லது சாராம்சநோக்கு என அதை விளக்கலாம்.
இந்திய மதங்களில் ’இதம்’ என்ற சொல் முக்கியமானது. ’இது’ என அச்சொல்லுக்கு அர்த்தம். இதெல்லாம் என்ன, இதெல்லாம் ஏன், இதெல்லாம் எவ்வாறு என்ற வினாக்களுக்கான பதில்தேடலே ஆன்மீகம்.
கடவுள் என்பது அந்தத் தேடலில் நம் முன்னோரால் கண்டடையப்பட்டு நமக்களிப்பட்டுள்ள ஒரு பதில் மட்டுமே. அந்தப் பதிலானது கடவுள் என ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் உண்மையில் அது பலவகையாக விளக்கப்படுவது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய ஓர் ஆளுமை அல்லது இருப்பு’. இஸ்லாமுக்கும் அப்படித்தான்.
இந்து மரபின் அடிப்படையாக உள்ள கடவுள் உருவகம் பிரம்மம். பிரம்மம் என்றால் இந்த முடிவற்ற பிரபஞ்சத்துக்கு எது மூலகாரணமாக உள்ளதோ அது. இந்தப் பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. அந்த மூலகாரணம் எப்படிப்பட்டது என்று அறியவோ விளக்கவோ முடியாது.
ஆனால் இப்பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் இன்னொரு வடிவம் என்பதனால் இதில் உள்ள எல்லாமே அதுதான். அதாவது மோர் என்பது உண்மையில் பால்தானே? ஆகவே இப்பிரபஞ்சத்தை, இதில் உள்ள எல்லாவற்றையும் அந்த மூலகாரணமாக எண்ணலாம். ஒரு மரமோ, மிருகமோ , பாறையோ , புயலோ, மழையோகூட அதன் தோற்றமே.இங்குள்ள அன்பு கருணை வீரம் எல்லாமே அதன் தோற்றமே
இவ்வாறு இந்து மரபு பல்வேறு கடவுள்களை உருவகித்துக்கொண்டது. எங்கெல்லாம் நம்மை நம் அன்றாடப் பார்வைக்கு அப்பால் பார்க்கச்செய்யும் ஒரு பிரம்மாண்டம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கடவுளைக் கண்டது. இவை இருவகை. பொருட்கள், கருத்துக்கள். ஆயிரம் விழுது பரப்பிய ஓர் ஆலமரம் பொருள்வடிவமான கடவுள் என்றால் ஒரு அகோர வீரபத்ரர் வீரம் என்ற விழுமியத்தின் வடிவமான கடவுள். ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற பெருங்கடவுள்கள் பற்பல விழுமியங்களைத் தொகுத்து உருவகித்த ஒட்டுமொத்த வடிவங்கள்.
ஆனால் அவை எல்லாவற்றையும் பிரம்மம் என்றுதான் இந்து மரபு சொல்லும். அறியமுடியாத பிரம்மத்தை இந்த அறியக்கூடிய வடிவத்தில் வழிபடுகிறோம் என்று அதற்குப்பொருள். இந்த விஷயத்தைக் குறியீடுகள் மூலம் விளக்குபவைதான் புராணங்கள்.
பௌத்தம் கடவுள் என்றால் பிரபஞ்சத்தை இயக்கும் முழுமுதல் நெறி அல்லது விதி என்று உருவகித்து அதை மகாதர்மம் என்ற சொல்லால் குறிப்பிட்டது.அதன் வடிவமாக புத்தரின் உடலை பிற்காலத்தில் உருவகித்துக்கொண்டார்கள்.
இந்த ’கடவுள்’ என்ற கருதுகோள் நமக்கு ஏன் தேவையாகிறது? மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக.
1. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் முன்பின் தொடர்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிறப்பு இறப்பு நோய் இழப்பு மகிழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே நமக்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது
கடவுள் என்ற உருவகம் இதைப்பற்றிய பதற்றத்தை தீர்க்க உதவுகிறது. வாழ்க்கையை கடவுளை வைத்து எளிமையாக வகுத்துக்கொள்ளமுடியும். கடவுள் என்பது எளிமையான திட்டவட்டமான விடை. மானுட வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் அந்த உருவகம் அளிக்கிறது
2. மனிதன் அன்பு,பாசம், கருணை, தியாகம், ஒழுக்கம் போன்ற பல நற்பண்புகளையும் பல்வேறு அறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இந்தப் பண்புகளும் அறங்களும் சீரான சமூகச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. கடவுள் என்ற உருவகம் இந்த எல்லா நற்பண்புகளையும் அறங்களையும் தொகுத்துக்கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. ‘அன்பே சிவம்’ ‘ஏசு அன்பாக இருக்கிறார்’ போன்ற வரிகள் இதையே குறிக்கின்றன
இந்தப் பண்புகளையும் அறங்களையும் நம் மனத்திலும் சமூக மனதிலும் நிலைநாட்ட கடவுள் என்ற உருவகம் உதவுகிறது. கடவுள் பக்தி என்பது சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த அறங்கள் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கை என்றுதான் அர்த்தம் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்
3. மனிதனுக்கு இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு தனிமை உணர்ச்சி உள்ளது. ஆகவே அவனுக்கு தலைக்குமேலே அவனை பார்க்கக்கூடிய அவனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தந்தை, அல்லது எஜமான், அல்லது அரசன் அல்லது அளவிடமுடியாத ஆற்றல் தேவையாகிறது. அதாவது மனிதனுக்கு வேண்டிக்கொள்ளவும் மன்றாடவும் புகார்செய்யவும் ஒரு இடம் தேவை. கடவுள் அந்த இடம்.
கடவுள் உண்டா இல்லையா என்பது பொத்தாம்பொதுவான கேள்வி. எந்தக் கடவுள், எப்படிப்பட்ட கடவுள் என்பதே இன்னும் குறிப்பான கேள்வி. அத்துடன் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் ஒரு அலகிலா ஆற்றல் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது ஆன்மீகமான கேள்வி. அதை ஆன்மீகதளத்தில் எழுப்பிக்கொள்ளலாம். அதைக் கடவுளுடன் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.
நடைமுறை வாழ்க்கையில் கடவுள் உங்களுக்கு எதற்காகத் தேவைப்படுகிறார் என்பதே இன்னும் முக்கியமானது. உங்களுக்கு ஏசு எதற்காகத் தேவைப்படுகிறார்? உங்கள் மனதில் ஏசு உயர் பண்புகளுக்கும் அறத்துக்கும் வடிவமாக இருக்கிறார் என்று கொள்வோம். ஏன் அவர் உண்டா இல்லையா என்று நீங்கள் விவாதிக்கவேண்டும்? அந்தப் புராணக்கதைகள் உண்மையா பொய்யா என ஏன் நினைக்கவேண்டும்.
பண்புக்கும் அறத்துக்கும் வடிவமான ஏசுவைப் பணிந்து அவர்முன் கண்னீருடன் மண்டியிடுவதில் என்ன நஷ்டம்? உங்கள் ஆன்மாவில் அவர் அன்பையும் பண்பையும் தியாகத்தையும் நிறைக்கிறார்தானே?ஆகவேதான் தேவாலயத்தில் பிரார்த்தனைசெய்தால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்.அந்த நிறைவை நீங்கள் இழக்க வேண்டியதில்லை.
ஒரு எளிய லௌகீகனாக உங்கள் அச்சங்களைக் களையவும் உங்கள் துயரங்களை இறக்கி வைக்கவும் உங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுவார் என்றால் அந்தக் கடவுளிடம் அதைச் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை. தேவாலயத்தில் அதை செய்யலாம்.
கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்துவிட்டுதான் இதையெல்லாம் செய்வேன் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இந்தக் கடவுள் உருவகம் உங்களுக்கு எதை அளிக்கிறது என்பதே முக்கியம்.
கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.
அந்த சமூக அமைப்பு உங்களுக்கு ஒரு சமூகவாழ்க்கையை வாழ உதவுகிறது என்றால் அதில் இயல்பாக நீடிப்பதே சரியானது. அந்தச்சடங்குகள் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான புற அடையாளமும் வாழ்க்கைநெறியும் உருவாகிறது என்றால் அதைக் கடைப்பிடிப்பதிலும் பிழை இல்லை. உங்கள் குடும்பம் அதில் இயல்பாக வாழ்கிறது என்றால் அதை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதே விவேகம்.
ஆன்மீகமான தேடலைக் கடவுள் மதம் இரண்டுக்கும் அப்பால் வைத்துக்கொள்ளவும். அது மிகமிக அந்தரங்கமானது. ஒரு குரு அமைந்தால் அவரிடமன்றி எவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. அதைப் புறவயமாக விவாதிக்கக் கூடாது.
ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.
ஆன்மீகத்தை ஒரு தூய மெய்த்தேடலாக , மத அடையாளம் அற்றதாக, அந்தரங்கமானதாக வைத்துக்கொள்வதே நல்லது. ஆன்மீகதளத்தில் நீங்கள் இந்துவோ கிறித்தவனோ அல்லாமல் ஒரு தூய மானுடப்பிரக்ஞையாக மட்டுமே இருப்பதே ஒரே வழி. அந்நிலையில் எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும் உங்களுக்கு ஒன்றே.
அப்படி நீங்கள் தேடினால் பைபிளையே மதம், கடவுள் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆன்மீகநூலாக வாசிக்கலாம். ஏசுவை மனிதகுமாரனாக அல்லாமல் மகத்தான ஞானகுருவாக அணுகலாம்.அதற்கான எல்லா வழிகளும் அதற்குள் உள்ளன.

Mysore Palace

Name: Mysore palace
Built:
1912
Architect:
Henry Irwin
Architectural style:
Indo-Saracenic
The Palace of Mysore is a palace situated in the city of Mysore in southern India. It is the official residence of the Wodeyars - the erstwhile royal family of Mysore, and also houses two durbar halls (ceremonial meeting hall of the royal court).
Mysore is commonly described as the City of Palaces, however, the term "Mysore Palace" specifically refers to one within the old fort. The Wodeyar kings first built a palace in Mysore in the 14th century, it was demolished and constructed multiple times.
The current palace construction was commissioned in 1897, and it was completed in 1912 and expanded later around 1940.

Mysore palace is now one of the most famous tourist attractions in India after Taj Mahal with more than 2.7 million visitors. Although tourists are allowed to visit the palace, they are not allowed to take photographs inside the palace.
Price of admission for foreign tourists is 200 INR., and for Indians 20 INR. All visitors must remove their footwear to enter the palace.
The regent of Mysore, Maharani Vani Vilas Sannidhna, commissioned a British architect, Henry Irwin, to build yet another palace in its place. The construction was completed in year 1912.
But slowly the beautification of the fort was also taken up and the inhabitants of the fort were slowly shifted out to newer Extension built outside. The present Public Durbar Hall wing was also added much later around 1940.
Temples
  The palace complex includes twelve Hindu temples. The oldest of these was built in the        14th century, while the most recent was built in 1953.
Some of the more famous temples are:
Someshvara Temple

Lakshmiramana Temple

Shwetha Varahaswamy Temple

Monday, 28 November 2011

நெடுநல்வாடை (பத்து பாட்டுகளில் ஏழாவது )

Netunalvatai, is a Tamil poetic work in the Pathinenmaelkanakku anthology of Tamil literature, belonging to the Sangam period corresponding to between 100 BCE – 100 CE. "Netunalvatai" is part of the Pattupattu collection, which is the oldest available collection of long poems in Tamil literature.
Netunalvatai contains 188 lines of poetry in the akaval meter. The poet Nakkirar wrote Netunalvatai. Netunalvatai poems belong to the Akam, or subjective themes of love and human relationships and utilises the location of the story to spins a vivid picture of the ancient Tamil country. Netunalvatai contains descriptions of the palace of the Pandya king Nedeunchezhiyan.

 Nature of Netunalvatai
The story of Netunalvatai is about the heroine who prays to the goddess for the return of her lover from the battlefield. Seeing the suffering of the heroine, her maids in the palace also pray to the goddess for the hero to quickly win the battle and return home to their mistress.
Meaning of Netunalvadai
Netunalvatai in keeping with its name, has the theme of the vatai, or cold breeze. The two adjectives netu and nal to the vatai breeze mean bad and good. The same breeze is at the same time is bad to the heroine who languishes in the palace and increases her suffering, at the same time, the breeze causes the hero to do good by conversing and consoling his suffering troops.

San Thome Basilica Church

Name: San Thome Basilica
Location:
Chennai, Tamil Nadu
Country:
India
Denomination:
Roman Catholic
Website:
www.santhomebasilica.com
History
Former name:
San Thome Church
Dedication:
St. Thomas
Relics held:
Bone of St. Thomas
San Thome Basilica is a Roman Catholic (Latin Rite) minor basilica in Santhome, in the city of Chennai, India. It was built in the 16th century by Portuguese explorers, and rebuilt again with the status of a cathedral by the British in 1893. The British version still stands today. It was designed in Neo-Gothic style, favoured by British architects in the late 19th century.
 History
Christian tradition holds that St. Thomas arrived in Kerala from Israel in 52 A.D. preached between 52 A.D. and 72 A.D., when he was martyred on St. Thomas Mount. The basilica is built over the site where he was believed originally to be interred.
San Thome Basilica is the principal church of the Madras-Mylapore Catholic Archdiocese. In 1956, Pope Pius XII raised the church to the status of a Minor Basilica, and on February 11, 2006, it was declared a national shrine by the Catholic Bishops' Conference of India. The San Thome Basilica is a pilgrimage centre for Christians in India. The church also has an attached museum.


Nagesh- The Actor

Name: Nageswaran C. Krishna Gundu Rao
Born:
September 27, 1933(1933-09-27), Dharapuram, Erode district, Madras Presidency,India
Died:
January 31, 2009(2009-01-31) (aged 75), Chennai, Tamil Nadu, India
Occupation
: Film actor
Years active:
1958- 2009
Spouse:
Regina
Children:
Ramesh Babu, Rajesh Babu, Anand Babu
Awards:

1974 Kalamamani
1994 Nammavar Tamil Nadu State Government Award
Nagesh (born C. Krishna Rao Gundu Rao; 27 September 1933 – 31 January 2009), was a Tamil film actor, mostly remembered for his roles as a comedian during the 1960s. He is regarded as one of the most prolific comedians in Tamil cinema.
 Nagesh was born in a Kannada family from Dharapuram, Erode. He was educated in Madras and worked as a clerk in the Indian Railways before entering Tamil film industry.He acted in over 1,000 Indian films from 1958 to 2008, performing in variety of roles as comedian, lead roles, supporting actor and antagonist. He died on 31 January 2009.
In a stark contrast to the comic roles he performed, Nagesh's personal life was wrought with suffering. After losing his father at an early age, Nagesh had to endure a weak financial situation and family ostracism which plagued him throughout his life.
The film Server Sundaram, a rags to riches story in which Nagesh plays the lead role, is believed to be roughly based on the real life story of the actor.Despite being primarily a comedian, Nagesh was rated highly as a character actor by his peers. Nagesh's style of comedy was largely inspired by Hollywood actor Jerry Lewis. Similarities between Nagesh and Lewis earned Nagesh the sobriquet "Jerry Lewis of India".

Wednesday, 23 November 2011

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்

"அத யோக அனு சாசனம்”
[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .
பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே...] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.
அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.
ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை  அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து  அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.
பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.
சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.
சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம்.  இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.
அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.  ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்
ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி  ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.
இவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்
சூத்திரம் இரண்டு
” யோக: சித்த விருத்தி நிரோத: “
[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]
பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.
ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.
இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.
இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.
ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி?
மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி  இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ”  என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.
அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?
யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.
இது நம் மூலநூல்களில் பலவற்றின்  முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .
யோகம் என்றால் என்ன? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே  சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

Tuesday, 22 November 2011

பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை

பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.


நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம்  குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள்  மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .
அதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள்  அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது. நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.
 ஆன்மீகம் ,தத்துவம், மதம்
====================
முதலில்  ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு  உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி  ஆகும். ”நான் யார்?  எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன? இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன ? எப்படிச் செயல்படுகின்றன ?” என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை.  மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை  நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டீன் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .
இப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம்’ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ?’ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம்.  அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறியலாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட  அவன் செய்யலாம் .
ஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது ? அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன?  இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .
ஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது  தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது  அந்த அறிதல் நிகழக்கூடிய  அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும்  வடிவமும்  உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு  விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .
தத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம்  பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.
தத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய  ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு’ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும்  ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம்  ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .
யோகம் , தியானம் ,பிரார்த்தனை
=========================
நம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.
தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில்  மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் .  அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து  அதன் சிதறுண்ட இயக்கத்தை  சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கி£றது .
ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர்  எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .
யோகம் மத வழிபாடா ?
==================
தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை  ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.
பழமையில் என்ன இருக்கிறது ?
=========================

தமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை  மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .
ஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமது மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.
பழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .
தமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார்? வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.
பழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.
எல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட
நம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்?
அறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.
மேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும்.  மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.
ஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.

Mayiladuthurai

Place: Mayiladuthurai
Country: India
State: Tamil Nadu
District: Nagapattinam

Mayiladuthurai, formerly known by its Sanskrit names Māyavaram and Mayūram is a town in the Nagapattinam District of the Indian state of Tamil Nadu. It is the headquarters of the Mayiladuthurai taluk of Nagapattinam district and is the second-largest town in the district. Mayiladuthurai is situated at distance of 281 kilometres south-west of Chennai, 70 kilometres north-east of Thanjavur and 50 kilometres north-west of Nagapattinam.
Mayiladuthurai gets its name from the peahen form in which the Hindu goddess Parvathi worshipped the god Shiva at this place. The town is one of the 274 Saiva holy places in the world.
Mayiladuthurai is of considerable antiquity and cultural and religious significance. The town must have originated in the Medieval Chola period though there are suburbs which predate the town itself.
Mayiladuthurai was ruled by the Early Cholas, Medieval Cholas, Later Cholas, Pandyas, the Vijayanagar Empire, Thanjavur Nayaks and the Thanjavur Marathas before it was annexed by the British East India Company along with the rest of the Thanjavur Maratha kingdom in 1799.
It rose to be an important town during British rule when it formed a part of Tanjore district. The town was constituted as a grade III municipality in the year 1866. Currently, Mayiladuthurai forms a grade I municipality.
The town is situated on a flat plain on the banks of the Kaveri River and is surrounded by paddy fields. The town is situated on the northern border of the Chola Nadu region of Tamil Nadu.

Stephen R. Covey Quotes



We Get results based on what we Do. What we Do depends of how we See the world around us. Do you need to re-examine how you See things?

Our character is basically a composite of our habits. Because they are consistent, often unconscious patterns, they constantly, daily, express our character.

We are the creative force of our life, and through our own decisions rather than our conditions, if we carefully learn to do certain things, we can accomplish those goals.

“The way we see the problem is the problem”

“Motivation is a fire from within. If someone else tries to light that fire under you, chances are it will burn very briefly.”

“Our ultimate freedom is the right and power to decide how anybody or anything outside ourselves will affect us.”

“We are not human beings on a spiritual journey. We are spiritual beings on a human journey.”

“We may be very busy, we may be very efficient, but we will also be truly effective only when we begin with the end in mind.”

“Management is efficiency in climbing the ladder of success; leadership determines whether the ladder is leaning against the right wall.”
“Every human has four endowments- self awareness, conscience, independent will and creative imagination. These give us the ultimate human freedom... The power to choose, to respond, to change.”

சந்தோஷ் சிவன் புகைப்படங்கள்







Monday, 21 November 2011

Motorola launches slimmer Razr for Rs.33,990

Mobile handset manufacturer Motorola Monday launched a slimmer version of its best-selling smartpohone-Razr in India. Priced at Rs.35,990, the best buy price of the handset is Rs.33,990.
The Android 2.3 smartphone is equipped with 4.3-inch super display, scratch-resistant gorilla glass screen, 1 GB RAM and a dual-core 1.2GHz processor, front-facing 720p HD video camera and 8-megapixel rear-facing camera.



The device also comes loaded with Motorola Motocast application which offers the power to stream or download content from a computer straight to the device.

It has work smart with smart actions -- a preloaded app on Motorola Razr which lets users automate everyday tasks and enable better battery life.  

Smart actions can turn down the ringer when user steps into work, and change the Bluetooth and GPS settings when he gets home to save battery.

"One of the best-selling mobile phones of all time, the original Motorola RAZR redefined what a mobile phone was as people worldwide proudly flaunted their fashion items," said Rajan Chawla, mobile devices business country head (sales and operations), India and South West Asia, Motorola Mobility.

"With the new Motorola Razr smartphone we're bringing sexy back in a stylish and sleek body with the power to create experiences you won't find in any other smartphone," he added





 

Umbrella

The basic umbrella was invented over four thousand years ago. We have seen evidence of umbrellas in the ancient art and artifacts of Egypt, Assyria, Greece, and China.
These ancient umbrellas or parasols, were first designed to provide shade from the sun. The Chinese were the first to waterproof their umbrellas for use as rain protection. They waxed and lacquered their paper parasols in order to use them for rain.

Origins of the Term Umbrella
The word "umbrella" comes from the Latin root word "umbra", meaning shade or shadow. Starting in the 16th century the umbrella became popular to the western world, especially in the rainy weather of northern Europe. At first it was considered only an accessory suitable for women. Then the Persian traveler and writer, Jonas Hanway (1712-86), carried and used an umbrella publicly in England for thirty years, he popularized umbrella use among men. English gentleman often referred to their umbrellas as a "Hanway."
 James Smith and Sons
The first all umbrella shop was called "James Smith and Sons". The shop opened in 1830, and is still located at 53 New Oxford Street in London, England.
The early European umbrellas were made of wood or whalebone and covered with alpaca or oiled canvas. The artisans made the curved handles for the umbrellas out of hard woods like ebony, and were well paid for their efforts.
English Steels Company
In 1852, Samuel Fox invented the steel ribbed umbrella design. Fox also founded the "English Steels Company", and claimed to have invented the steel ribbed umbrella as a way of using up stocks of farthingale stays, steel stays used in women's corsets. After that, compact collapsible umbrellas were the next major technical innovation in umbrella manufacture, over a century later.



போதி – சிறுகதை

அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப்ப்ற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்லபாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள்ள ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறேன்.
அன்று இப்படி இல்லை . முகப்பில் சிமிட்டி வளைவும் ‘திருவதிகை ஆதீனம் ‘ என்ற எழுத்துக்களும் இல்லை. ஆலமரம் அப்படித்தான் இருக்கிறது . ஆனால் அன்று வந்து நுழைந்தபோது இது அளித்த பிரமிப்பை இப்போது தரவில்லை . ஜடையை அவிழ்த்துப்போட்ட கிழ ராட்சசி போல பயமுறுத்தும் கம்பீரம். ஆனால் பாத்திகள் எல்லைவகுத்த முற்றமும் விழுதுகளினூடே அமைக்கப்பட்ட சாய்வு பெஞ்சுகளும் சூழலையே மாற்றியமைத்துவிட்டன. அன்று மடத்தின் முன் நிச்சிந்தையாக பசுக்கள்படுத்து மென்று கொண்டிருக்கும், இப்போது ஒரு கார் நிற்கிறது .
உள்ளே அறிமுகமானமுகங்கள்தாம். பண்டாரங்கள் என்னை அடையாளம் காணவில்லை .அவர்களுக்கு என் கைகூப்புதல்பிடிக்கவில்லை. கைகூப்புதலில்தான் எத்தனை வகை . வேறு எது புரியாவிட்டாலும் இது புரிந்துவிடும் சாமியார்களுக்கு .அன்றும் கைகூப்பினேன் , கண்ணில்கண்ட முதல் பண்டாரத்திடம். அவர் ஆசியளித்துபோய்விட்டார். எனக்கோ பசி . நிற்கவே முடியவில்லை. அறைக்குளிருந்த யுவபண்டாரத்தை ஒருவன் குப்புற விழுந்து தெண்டனிடுவதை கண்டேன். நானும் உட்புறத்தை அடைந்து அதுபோலவே செய்தேன். ‘யார் ? ‘ என்றார். பெயரைச் சொன்னேன். ‘ஊர் ? ‘ . ‘விலாசம் ‘ என்றெல்லாம் விசாரித்தார் . சொல்லமனமில்லை , ஒரு நாடோடி ,மகாசன்னிதானத்தைபார்க்கவேண்டும் என்றேன். முகம் கடுகடுப்படைய குரு மகாசன்னிதானத்தைபார்ப்பது அத்தனை சுலபமல்ல என்றார் . கலங்கிபோய்விட்டேன். ‘அவருடைய புத்தகங்களை படித்தவன் , ரொம்பதூரம் தாண்டி வந்திருக்கிறேன் ‘ என்றேன் .புறக்கணிப்பான முகபாவத்துடன் கண்களை கணக்குபுத்தகத்தின்மீது பதியவைத்துக் கொண்டார் . பரிதாபமாக நின்றேன். சற்று கழித்து ஏறிட்டு பார்த்தார் . ‘சாப்பிட்டாயா ? ‘ என்றார் . ‘இல்லை ‘ என்றேன். ‘முத்து ‘ என்றார், வந்த மொட்டை கிழவனாரிடம் ‘கிரஹஸ்தர் சாப்பாடு ஒன்று ‘ என்றார் .சாமி கிருகத்தை துறந்து வந்தவன்தான் நானும் என்று சொல்லியிருக்கலாம். ஆடிப்போயிருப்பார். நடுத்தரவீட்டு சமையல்பாத்திரங்கள் போல சிலநூறு சொற்களை வைத்துதான் அவரது தலையே இயங்கியது என பிற்பாடுதான் அறிந்தேன்.அப்போது ஞானநிதிக்கு காவல் வைத்த பூதம் போலத்தான் இருந்தார் .
இப்போது வேலையில் இருக்கிறேன் என்பதில் முத்துவுக்கு மகாசந்தோஷம் . சமையற்கார அப்பையர் ‘கலியாணமாகிவிட்டதா ? ‘ என்று கேட்டார் . ‘பெண்தேடிக் கொண்டிருக்கிறேன் ‘ என்றேன். ‘லட்சுமி போல ஒன்றை பார்த்து பிடித்து கொண்டுவரவேண்டியதுதானே ? ‘ என்றார் அப்பையர் . ‘முட்டுமா என்று தான்பயம் ‘ என்றேன் . ‘பழைய பைத்தியம் தெளியவில்லை போலிருக்கிறதே ‘ என்று சிரித்தார் .மடத்துச் சோற்றுக்கு மாற்றமே இல்லை .கீரைக்குழம்பு ,கத்தரிக்காய் வதக்கல், – எண்ணையல்ல அசல் நெய். அரிசிஅப்பளம் .பெரியசிவப்புப் பழம் இரண்டு.ஒரு துண்டு வெல்லம். உப்பு . .. பரிமாறப்பட்ட அமைப்புகூட அப்படியேதான் . நாலு தலைமுறைக்குமுன்பு கூட ஏதோ ஒரு அய்யர் இப்படித்தான் பரிமாறியிருப்பார் .
மகாசன்னிதானத்தை உணவு அறையில்தான் முதல்முறையாக சந்தித்தேன்.கையில் யோகதண்டு .மரத்தாலான பாதக்குறடுகள்.தழையத் தழைய காவிவேட்டி உடுத்து காவி போர்த்தியிருந்தார் . கழுத்து முழுக்கபலவிதமான உருத்திராக்க மாலைகள் .ஆபரணங்கள் .கைகளில் கங்கணமும் காப்பும். நீண்ட நரைகலந்ததாடி. சுமையாக ஜடை .முடிப்புதருக்குள் பைத்தியம் மினுங்
கும் கண்கள் . மிகமெல்ல நடந்தார் .பின்புறம் காரியஸ்தபிள்ளை .- அதாவது காறுபாறு. உதவியாளரான தொண்டர், பிற அணுக்கத் தொண்டர்கள் முதலானபரிவாரங்கள் .கட்டில்போல ஒன்று மூலையில் கிடந்தது. கொசுவலை போல அதைமூடியபடி மரச்சட்டங்களில் திரை தொங்கியது. அதற்குள்ளாகவே அங்கு உணவு பரிமாறப்பட்டிருந்தது. சன்னிதானம் உள்ளே போய் அமர்ந்ததும் திரைகள் மூடப்பட்டன. பழைய கட்டிடமானதனால் அரையிருட்டு வெளியே. உள்ளே சன்னிதானம் முழு இருட்டில்தான் உணவு உண்கிறது .துறவிகள் அமர்ந்த வரிசைக்கு மிகவும் தள்ளித்தான் கிருஹஸ்தர் வரிசை. என்னையும் சேர்த்து எட்டுபேர். மணை உயரமாக இருந்தது .காலகளை மடக்கி அமர சிரமப்பட்டேன். சக குடும்பிகள் யாரிவன் என்பது போல பார்த்தார்கள்.குருமகா சன்னிதானம் சாப்பிட்டுமுடித்து கிளம்பியது .சப்பென்றிருந்த உணவை நான் அப்போதும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. சன்னிதான என்னை கவனித்து தயங்கி நிண்றது.நான் உருட்டிய கவளத்தை என்ன செய்வதென்றறியாமல் தவித்தேன்.வேட்டியை மார்பில் கட்டியிருந்த காறுபாறு குனிந்து வாய்பொத்தி ஏதோ சொன்னார்.சன்னிதானம் சிம்மபாணியில் தலையாட்டியது .மீண்டும் என்னைபார்த்துவிட்டு புல்டோசர் போலநடந்து சென்றது .

சாயந்தரம் எனக்கு அழைப்பு வந்தது. சிவப்புகம்பளம் விரிக்கப்பட்ட தரையும் பூதாகரமான தாழும் , பித்தளையிலான சிற்ப அலங்காரங்கள் கொண்ட பெரிய கதவுகளும் , தாழ்ந்த அலங்கார உத்தரங்கள் கொண்ட கூரையும் , உடைய பெரியமரத்தாலான அறையின் மத்தியில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் குருமகா சன்னிதானம் உட்கார்ந்திருந்தது .குரல்கேட்கும் தூரத்தில் என்னை உடகார ப் பணித்தது .
எனக்கு அவரது தோற்றமும் தோரணையும் ஒருவிதமானபிரமிப்பை அளித்தபோதும் கூட ஏதோ உள்ளூர உறுத்திக் கொண்டிருந்தது .அவருடையகால்களை தற்செயலாகப் பார்த்தவன் அதிர்ந்துபோனேன்.யானைக்கால்.தனியொரு உடல்போல அது முன்னால் தூக்கி வைக்கப்பட்டிருந்தது .அந்த நடையின் ரகசியம் புரிந்தது .உ டனே இலேசான சீழ்வாடை என் நாசியை அடைந்தது . அந்தக் கால் பெரிய துணிப்பொட்டலம் போல இருந்தது , ஈரம் வேறு.
பெயரைக் கேட்டார் , சொன்னேன். ‘நிஜப்பெயர்தானே ? ‘ எனக்குக் கோபம் வந்து ஏதும் பதில் சொல்லவில்லை. ‘பரீட்சையில் தோற்றுவிட்டாயா ? ‘ ‘இல்லை ‘பின்னே ? ‘ அதற்கும் மெளனம் சாதித்தேன். ‘அப்பா அம்மாவுடன் சண்டையா ? ‘. ‘இல்லை ‘ . ‘ ‘என்னிடம் கூற முடியாத ஏதாவதா ? ‘ என்றார் .விரல்பட்ட அட்டைப்பூச்சி போல கூசிக்குறுகினேன்.அவர் கண்களைப்பார்த்தேன் .பைத்தியச்சிரிப்பு .சோதிக்கிறாரா என்ன ?
‘என்னால் படிக்க முடியவில்லை ‘ ‘
‘ ‘என்ன படிக்கிறய் ? ‘ ‘
‘ ‘பிகாம்,ஆனால் முடிக்கவில்லை,விட்டு விட்டேன் ‘ ‘
‘ ‘வீட்டுக்கு போ. எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுமல்லவா ? ‘ ‘
‘ ‘எனக்கு ஆர்வமில்லை ‘ ‘
‘ ‘பின்னே ? ‘ ‘என்றபடி துருவிபார்த்தார் .
தலைகுனிந்தேன். குழம்பியவனாக அவரைபார்த்தேன். என் நிலைமை பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த சொற்றொடர்கள் எல்லாமே பொருத்தம் இல்லாதவையாக பட்டது .மனசால் துழாவினேன். அவர் என்னை உற்றுபார்த்தபடி இருந்தார் .
சட்டென்று என் மூளை மின்னியது .முளைத்த வார்த்தைகளை கோர்த்து ‘ எனக்கு எல்லாரையும்போல வாழ விருப்பம் இல்லை ‘ என்றேன்.
அவர் புருவங்கள் சுருங்கின ‘ அப்படியென்றால் ? ‘
‘எல்லாரும் பொய் சொல்கிறார்கள் ,பணம்தான் எல்லாருக்கும் பெரிதாக இருக்கிறது . எல்லாரும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கிறார்கள் . எங்கள் புரபஸர்கள் கூட பரஸ்பரம் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் ‘
அவர் இலேசாக சிரித்தார் ‘நீ மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கவேண்டும் ? ‘ ‘
‘எனக்கு பிடிக்கவில்லை ‘
‘நீ உன்னை ஓர் அபூர்வபிறவி என்
று எண்ணுகிறாய். எல்லாருக்கும் அதுதான் எண்ணம் .உலகில் பிரச்சினையே அதுதான் , அகம் ‘
சன்னிதானம் மிக்க மகிழ்வோடு என்னை சீடனாக ஏற்றுகொள்வார் என எண்ணியிருந்தேன். எனக்கு பீதிகிளம்பியது . ‘என்னை யாருக்குமே பிடிக்கவில்லை …எவருமே என்னை புரிந்துகொள்லவில்லை எல்லாருக்கும் என் மீது ஏளனம் ‘
‘உன்னில் சில விசேஷமான திறமைகள் இருக்கலாம் ,அதற்காக நீயே உலகின் மையம் என எண்ணிக் கொள்ளவேண்டியதில்லை ‘
‘ ‘நான் அப்படி எண்னவில்லை ‘ ‘
‘ ‘சர் ‘ ‘ என்றார் சிந்த்தபடி. ‘ ‘உன் அம்மா அப்பா இப்போது என நிலையில் இருப்பார்கள் தெரியுமா ? ‘ ‘
என்மனம் அடைத்தது . தலைகுனிந்தேன்
‘ ‘திரும்பிப்போ அதுதான் நல்லது . ‘ ‘
‘ ‘மாட்டேன் ‘ ‘
‘ ‘பின்னே ? ‘ ‘
‘ ‘எனக்கு நிறைய படிக்கவேண்டும் என்று ஆசை.ஊரெல்லாம் சுற் றிப்பார்க்கவேண்டும். கங்கையை பார்க்கவேண்டும் . கங்கைகரையில் அலைகளைபார்த்தபடி அமர்ந்திருக்கவேண்டும். ‘
அறைவாசலில் ஒரு இளம்பண்டாரம் தென்பட்டார். அவரைபார்த்ததும் சன்னிதானம் எழுந்தது ‘ என்னால் அதிக நேரம் உட்கார்ந்திருக்கமுடியாது, காலில் தாங்கமுடியாத வலி ‘ என்றார்
‘ ‘காலில் என்ன ? ‘ ‘
‘ ‘ காங்கரின் என்கிறார்கள் .ஏதோ ஆணி அல்லது விஷமுள் குத்தியிருக்கலாம் என்கிறார்கள் . சரியாகபோய்விடும் ‘ ‘
நானும் எழுந்தேன்
‘ ‘ உன்கனவின் மிச்சத்தை நான் சொல்லட்டுமா ? ‘ ‘ என்றது சன்னிதானம் விஷப் புன்னகையுடன் ‘கங்கை கரையில் உனக்கு ஒரு குரு கிடைக்கிறார்,அவர் உன்னை ஒருமகாத்மாவாக ஆக்குகிறார்.பிறகு நீ ஊருக்குள் வருகிறாய்.ஜனங்கள்கூட்டம் கூட்டமாக் உன்காலில் விழுகிறார்கள். ‘தன் காலை சுட்டிக்காட்டி ‘அந்தக் காலைப்படி இருந்தால் எப்படி இருக்கும் ? ஹெ ஹெ ஹெ ஹெ ‘முடிப்புதருக்குள் வெறியும் உற்சாகமுமாக கண்கள் மின்னின.
‘இந்தக்காலைபார்த்தால் உனக்கு குழப்பமாக இல்லையா ? ‘
‘ ‘என்ன ? ‘ ‘
‘ ‘ மடாதிபதி ,பெரிய பண்டிதன், ஞானி இப்படியெல்லாம் எண்ணித்தான் இங்கு வந்திருப்பாய் இல்லையா ? நான் ஞானி இல்லை ரோகி என்று தெரிந்தபோது அதிர்ச்சி ஏற்படவில்லையா ? ‘ ‘
சங்கடமாக உதவிப் பண்டாரத்தை பார்த்தேன் கழற்றிக் கொள் என்று கண்ணைக்காட்டியது அது.
‘ ‘ பயப்படாதே ஞானிக்கும் பேதைக்கும் ரோகம் ஒன்றுதான்.ஞானிக்கு வலிகொஞ்சம் அதிகம். ஹெ ஹெ ஹெ ஹெ ‘ ‘
உள்ளூர ஆடிப்போய்விட்டேன். எப்படி அந்த உள்நடுக்கத்திலும் அங்கு சிலநாட்கள் தங்க முடிந்தது என்பது எனக்கு இப்போதும் வியப்புதான் .பெரிய புராதனமான மரக்கட்டிடம் அது .சதா உளுத்து உதிர்ந்து கொண்டிருந்தது .எங்கும் மண்போல உளுப்பல் குவிந்து கிடந்தது .அறைகளில் அரைமணிநேரம் கூட அசையாமல் அமர முடியாது . உத்தரம் உளுத்து உதிரும் மரத்தூள் உடம்பை மூடிவிடும். மரத்தில் துளைத்து குடியேறிய புழுக்களில் கிரீச்சிடல் விடது ஒலிக்கும்.பகலில் வண்டுகள் மெளனத்தை அதிரச்செய்தபடி ரீங்கரித்து வட்டமிட்டு பறந்தன.குளவிகளும் வேட்டுவாளிகளும் இஷ்டத்துக்கு இருந்தன.புழுப்பூச்சிகளின் பெரியதோர் உலகமே இருந்தது .இதுதவிர இரவு பகல் எந்நேரமும் எலிகள்கீச் கீச் என்று ஒலித்தபடி மச்சுமீது தடதடத்து ஓடின.கட்டிடத்தில் பாதிப்பங்கு அறைகள் புழக்கமில்லாது மூடிக்கிடந்தன. அந்த அறைகளின் நாடித்துடிப்பு போல அங்கிருந்து வவ்வால் சிறகடிப்பு கேட்டது .அங்கு வந்துபோகும் மனிதர்கள் கூட இக உலகத்துக்கு தொடர்பற்ற சரித்திரகாலக் கதாபாத்திரங்கள்போலிருந்தார்கள்.
அங்கு தங்கியிருந்தநாட்களில் அனேகமாக தினமும் சன்னிதானத்தை சந்தித்தேன். பெரும்பாலும் சுவடி அறையில்.மடத்தின் மேற்கு மூலையில் கிட்டத்தட ஒரு நிலவறைபோல இருந்தது அது .அதற்குள் முழுக்க சுவடிகள் பெட்டி பெட்டியாக நிரம்பியிருந்தன.ஒரு மதியம் தான் நான் முதல்முறையாக அங்கு அழைக்கபட்டேன். உள்ளே குத்து விளக்கு எரிந்தது . சன்னிதானம் நடுநாயகமாக ஸ்டூல் மீது அமர்ந்து ஏதோ சுவடியை பரிசோதித்திக் கொண்டிருந்தது .அவரது நிழல் சுவரில் பெரிதாக விழுந்திருந்தது .அங்கு தூசுமணமே பிரதானமாக இருந்தது .சுவடிகள் செல்லரித்தும் சிதைந்தும் குப்பைபோல குவிந்துகிடந்தன.
சன்னிதானம் என்னிடம் ‘ உட்கார் ‘ என்றது .தயங்கினேன், தரைமுழுக்க கரையான்கள் பிலுபிலுவென அலைந்தன.தூசு படலமாகபடிந்திருந்தது . ‘ பரவாயில்லை உட்கார் ஏட்டுசுவடிகளின் தூசுதானே ? போகபோக இதைப்போல மணம் வேறு ஏதும் இல்லை என்று எண்ண ஆரம்பித்து விடுவாய் . உனக்கு தெரியுமா தூசு இல்லாத புத்தகமோ சுவடியோ படித்தால் படிக்கும் போதையே எனக்கு வருவது இல்லை ‘
நான் கல்லறைக்குள் புதையுண்டவனாக உணர்ந்தேன்.தலைக்குமேல் நூற்றாண்டுகள்தாண்டிசென்று விட்டன.
குருமகாசன்னிதானம் தலையை சொறிந்தபடி ஒரு ஏட்டைபுரட்டியது .திடாரென்று என்னிடம் ‘சிவஞானபோதத்துக்கு எத்தனை உரைகள் ? ‘ என்று கேட்டது .விழித்தேன்.பிரகு நினைவு கூர்ந்தேன். தீட்சிதர் உரை மட்டுமே எனக்கு தெரியும் முதல்பத்து பக்கம் படித்திருக்கிறேன். பதி பசுவை பாதிக்கும் விஷயங்கள் என்னை குழப்பிவிட்டமையால் மேற்கொண்டு படிக்கும் தைரியம் வரவில்லை அப்போது .அதை அவரிடம் கூறினேன்.
‘இங்கே மொத்தம் இருபத்தேழு வித்தியாசமான உரைகள் இருக்கின்றன.சங்கீத சாஸ்திரம் ,வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம் ,இல்க்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும்.அதில்பாதியை பிறர் கண்ணால் கூட ப் பார்த்திருக்கமாட்டார்கள். ‘
எனக்கு மனம் அதிர்ந்தது ‘எல்லாமே செல்லரித்து போய்விடுமே ‘என்று ஏங்கினேன்.
‘ஆமாம் ‘ என்று பெருமூச்சு விட்ட்டார்
‘எவ்வளவு புத்தகங்கள்! ‘
‘உனக்கு இந்த அறையையே அப்படியே விழுங்கிவிடவேண்டுமென தோன்றுகிறதல்லவா ? ‘
‘ராமபாணம் அதிர்ஷ்டம் செய்த ஜென்மம்! ‘
‘கவிதை!ஹெ ஹெ ஹெ!கவிதை! ‘
அந்த மாற்றம் என்னை குலைநடுங்க செய்தது .அந்தசிரிப்பை சித்த சுவாதீனமுள்ள ஒருமனம் எழுப்ப்முடியாது ,பார்வையை விலக்கி வெளியேறும் வழியை கவலையுடன் ஒரு முறை கவனித்துக் கொண்டேன்.
‘வெட்கப்படாதே .கவிதை நனறாகவே இருக்கிறது .கவிதை எழுது ஆனால் கவிதையும் சன்யாசமும் ஒருபோதும் சேர்ந்துபோகாது ‘
‘ஏன் ? ‘
‘அது வேறு , இது வேறு.அது கனவு இது யதார்த்தம்.உன்னைக் கண்டால் கண்வாசிரமத்து சகுந்தலை போலிருக்கிறது ‘
புன்னகை புரிந்தேன்
‘காமத்தைக் கண்டு ரொம்ப பயப்படுகிறாய் இல்லையா ? ‘
‘கடவுளே ‘ என்றேன் உள்ளுக்குள்
‘கவிதை எழுதுகிறவனெல்லாம் அப்படித்தான். ஒன்று நாய் மாதிரி நக்கி அலைவான்கள், அல்லது பயந்து சாகிறது .எனக்கு கவிதையும் பிடிக்காது ,கவிஞர்களையும் பிடிக்காது .என்னுடைய குருமகாசன்னிதானத்துக்கும் அப்படித்தான்.
‘ உங்கள் குருவா ? ‘
‘ஆமாம் .பெரியபண்டிதர். என்னுடைய பன்னிரண்டாவது வயதில் இதை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது நானும் உன்னைப்போலவே ஆசைப்பட்டேன். ‘சன்னிதானம் பெருமூச்சு விட்டர். ‘ ஆனால் நான் உன்னைபோல கனவு காணும் ஆசாமி இல்லை.கனவு காண்பவன் யதார்த்தததை பயப்படுவான். பாதியில் விட்டுவிட்டு ஓடுவான்.நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ? ‘
‘குருமகா சன்னிதானம் இந்த அறையை க் காட்டினார் ‘
‘ஆமாம் காட்டினார். ஒன்று இரண்டு அல்ல முப்பது வருடம் இந்த சுவடிகளை படித்து ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரதி எடுத்திருக்கிறேன்.என் குருமகா சன்னிதானம் பெரிய அறிவாளி .யோகி என்று சொல்ல மாட்டேன். அவரோடு பாதி கிரந்தங்கள்போய்விட்டன, நான் படிப்பதற்கு முன்பே ‘ ‘
‘முக்கியமானவற்றை ம ட்டும் தேர்வு செய்து பிரதியெடுத்து வைக்கலாமே ? ‘
‘வாசித்தவர்தானே சொல்லமுடியும் எது முக்கியம் என்று ? அப்புறம் இந்த உரை வியாக்கியானங்கள்…. குரு மகா சன்னிதானம் கற்றதெல்லாம் வீணாகப் போயிற்றே என்று உருகியபடித்தான் சமாதியனார் ‘ குருமகாசன்னிதானம் சுவடிக்கட்டை வீசியது ‘அப்புறம் எனக்கு சந்தேகங்கள் வர ஆரம்பித்தன. எந்த கருத்து எந்த கிரந்தத்தில் என்று.அதற்கு எதிர்கருத்து எந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று . இங்கு விலாவரியான அ டுக்கு இல்லை பார்.ஆத்திரத்தில் ஒன்றை தேடினால் ஒன்பது கிரந்தங்கள் கலைந்து போகும் .நானும் ராப்பகலாக ஒப்பிட்டு ஆராய்ந்து வருடங்களை செலவிட்டிருக்கிறேன்,.கடைசியில்பார்த்தால் இப்போது இதற்குள் உருப்படியாய் ஒரு கிரந்தம் கூட இல்லை.எல்லாம் கூடிக்கலந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல்… இனி இதிலிருந்து ஒரு கிரந்தத்தை முழுசாக எடுப்பது மிகவும் கஷ்டம்.எந்த சுவடி எந்த நூலுக்குரியது எனறு எப்படி தெரியும் ? என்னால் மட்டுமே அதை கண்டுபிடிக்க முடியும். நான் இங்கே வந்தால் அழுதபடித்தான் திரும்பிப்போவேன். திருமந்திரம் எடுத்தால் நடுவே மதங்க சாஸ்திரம் .எப்படியிருக்கும் மனசுக்கு ?நீயே சொல்லு. ஆனால் என்னால் இங்கு தினமும் வராமலும் இருக்க முடியாது .இந்த தூசு மணம்தான் என் வாழ்வில் பெரிய சந்தோஷம். ‘ பண்டார சன்னிதி பெருமூச்சுவிட்டது . ‘ ‘ஆத்திரத்தில்சிலசமயம் எல்லாவற்றையும் போட்டுகொளுத்திவிடலாம் என்றுகூட பற்றிக் கொண்டுவரும் ‘
‘ ‘ புதிய பண்டாரங்களிடம் சொல்லகூடாதோ ? ‘
‘ ‘எவனுக்கு மண்டை இருக்கிறது ? சோற்றுக்கு வழியில்லாதவனெல்லாம் இங்கு வ்ந்து சேர்ந்துவிடுகிறார்கள் சின்னவ்ரிடம் காட்டினேன் அவருக்கு இதெல்லாம் ஏதோ அசிங்கமான இடம் போல தோன்றுகிறது ,மூக்கை பிடித்தபடி வருகிறார்.இங்கிருந்துதான் மடம் முழுக்க சிதல் பரவுகிறதாம் , பெரிய கண்டுபிடிப்பு ! கட்டிடடம் பழைய கட்டிடம். மட்காமலிருக்குமா ? அகண்ட சக்தியின் பசியடங்காத உதரமல்லவா இந்த பூமி ? அதில் பாறைகூட மட்கும் தெரியுமா ? உனக்கு கல்லூரியிலே என்ன பாடம் ? ‘
‘பி காம் ‘ என்றேன்.அவருடைய கண்கள் என்னை உள்ளூர நடுங்க செய்தன.தனி அறை . கொன்றுபோட்டால்கூட கேட்பாரில்லை.எப்படி வெளியேறுவது ? அதே சமயம் அவருடையபேச்சு அடிக்கடி என் மூளையை சொடுக்கியது.அந்தபோதை என்னை மீள விரும்பாதபடி இழுத்தது .
‘அப்படியென்றால் ? ‘ என்றார்
‘கணக்கெழுத்து ‘
‘அடாடா அதுதான் ஓடிவந்துவிட்டாயா ? ‘
‘ ஆமாம் ‘ என்றேன் , என் தவிப்பு அதிகரித்தது .
‘நிறைய படிப்பாயோ ? ‘
‘கொஞ்சம் ‘
‘என்னென்ன ? ‘
‘கவிதைகள், அப்புறம் விவேகானந்தர் ‘
‘விவேகானந்தனா ? அவன் யோகியோ ஞானியோ இல்லை . அறிவாளி, பேசத்தெரிந்தவன் . :விற்கத்தெரிந்தவன்.. ‘
‘ஏன் ! ‘ என்றேன் கோபத்துடனதே சமயம் விவாதம் செய்துபயனில்லை என்றது என் உள்மனம்.
‘அவன் சைவத்தையும் வைணவத்தையும் எப்படி ஒன்றாகபர்க்கிறான் ? இரண்டும் வெவேறு வழிகள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறான் ? அவனுக்கு மக்கள் ஆதரவு தேவை. அதற்காக அரசியல் பேசுகிறான் ‘
‘இரண்டும் ஹிந்து மதம்தானே ? ‘
‘ ‘ஹிந்து மதமா ? ஹெ ஹெ ஹெ ஹெ அப்படி ஒரு மதம் உண்டா ? நான் கேள்விப்பட்டதே இல்லையே ? ஹெ ஹெ ஹெஹெ இதோபார் ,ஒப்பிட்டால் ஒரே மதம் தான் சரியான மதம் அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணர முடியாத வெறும் பண்டிதன் ‘ ‘
‘ ‘அப்படியானால் ஞானி யார் ? ‘ ‘
‘ ‘அசாதாராண மனிதர்களிலே இரண்டு வகைதான். யோகியும் அறிவாளியும் .பயத்தை வென்றவன் யோகி. மண்ணில் எவனுமே ஞானி இல்லை. ‘ ‘
‘ ‘எப்படி ?
‘ ‘மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழமையடையவே முடியாது .தன் உடம்பே சகலத்துக்கும் அளவுகோல எவனுக்கும். பெருவெளிக்கு முன் உடம்பு என்பது அற்பத்திற்கும் அற்பம். அப்படியிருக்க முழுமை ஞானமாவது உலக்கையாவது. நான் இதைப்பற்றியெல்லாம் ஏராளமாக யோசித்திருக்கிறேன், அப்புறம் விட்டுவிட்டேன் . அகண்ட வடிவமான சத்தியம் மனிதப்பிரக்ஞையின் வடிவத்துக்கு ஒருபோதும் மாறாது .உனக்கு ஆங்கிலம் தெரியுமா ? ‘
‘கொஞ்சம்.. ‘
‘ஆங்கிலத்திலே நிறையப் படிக்கும்படியான உத்தகங்கள் உள்ளனவா ? ‘
‘எதற்கு சைவம்தானே சிகரம் ? ‘
சட்டென்று குருமகா சன்னிதானம் கோபம் கொண்டார் ‘ஆமாம் சந்தேகமா உனக்கு ? ஆங்கிலேயெ ஞானம் பூரணமல்ல என்று நிரூபித்துக் காட்டத்தான் அதைபடிக்கவேண்டுமென்று சொல்கிறேன் . நீ இந்த சுவடிகளை எடுத்துக் கொள் ‘
‘எதற்கு ? ‘ ‘
‘வெந்நீர் போட்டு குளிக்க முட்டாள்! ‘
நான் வயிறு ஜில்லிட எழபோனேன்.
குருமகா சன்னிதானத்தின் நெற்றி நரம்பு அசைந்தது ஒரு க்ணத்தில் ச்மாதானமாகி ‘பயப்படாதே ‘ என்றார் ‘எனக்கு மனநிலை சரியில்லை என்றுபயப்படுகிறாய் அல்லவா ? ‘
‘இல்லை ‘ என்றேன் பயத்துடன்.
‘வலிக்காக பெத்தடின் பயன்படுத்துகிறேன்.பயப்பட வேண்டாம் .நீ இவற்றை தொகுத்து புத்தகங்களாக பிரசுரம் செய் ‘
‘ஆனால் எனக்கு தெரியாதே எந்த சுவடி எந்த புத்தகம் என்று ? ‘
‘ உண்மைதான் .அது எனக்கும்மட்டும்தான் தெரியும் .இவற்றை புத்தகமாக போட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். மடமும் வம்பும் வழக்கும்.. வயதானகாலத்திலே இந்த உபாதை வேறு . இப்போது இப்படி வீங்கிவிட்டதனால் கொஞ்சம் பரவாயில்லை. காலையில் சீழ் எடுக்கும்போது ஒருமணிநேர இம்சை .பிறகு மெல்ல சரியாகிவிடும். அப்புறம் ராத்திரியிலேதான் வலி.. ‘
அந்த பேச்சை தவிர்க்க விரும்பினேன். ஒரு சுவடிக்கட்டை எட்டி எடுத்தேன்.மரப்பெட்டிக்குள் ஒரு அடுக்குக்கு கீழே மண் .
‘பாதி சுவடிகள் அப்படித்தான் இருக்கும் ‘ என்றார்.
‘செல்லரிக்காத சுவடிகளை எழுதி வைத்துவிடவேண்டும் .எப்போதாவது பிரசுரிக்கலாம். எவ்வளவுமுடியுமோ அவ்வளவு ‘என்றேன்.
மகாசன்னிதானம் கண்கள்மின்ன ‘உண்மையாகவா சொல்கிறாய் ? ‘ என்றார். ‘நீ எழுதுவாயா ? ‘
‘எழுதுகிறேன்.ஆனால் நூல்களை அடுக்கவேண்டுமே.. ‘
‘நான் என் நினைவிலிருந்துகூட கூற முடியும்.அது ஒன்றும் பெரிய விஷயமல்ல.ஆனால் நீ இங்கே இருக்கவேண்டும்.ஒரு ஆறுமாதம். போதும்… ‘
‘எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கிறேன் ‘
‘உன் அப்பாவின் விலாசம் சொல்லு நான் அவருக்கு எழுதுகிறேன்.நான் அவருக்கு கடிதம், போடுகிறேன்.அவர் நான் சொன்னால் கேட்பார் ‘
‘அப்பா- அப்பாவுக்கு நானே எழுதுகிறேன்.. ‘
‘சரி ‘ என்றார் அவர் .அதை முக்கியமாக கருதவில்லை என்று தெரிந்தது .
குத்துவிளக்கு கருகத் தொடங்கியது
‘போவோமா ? ‘ என்றார்
குத்து விளக்கை எடுக்கப் போனேன் . ‘ வேண்டாம் அணைந்துவிடு ‘ என்றார் .ஊதினேன் .திரி கருகும் மணம் சுவடிப்புழுதி மணத்தை அழித்தது .
கிளம்பும்போது நான் அவரை தூக்கி விடவேண்டியிருந்தது .அவருடைய பெரியகால் என்மீது பட்டது .என் உடம்பு கூச்சத்தால் சுருங்கிப் போயிற்று. அவர் அதை உணரவில்லை . தன் உடம்பின் அசிங்கம் எந்த மனிதனுக்கும் புலனாவதில்லை.நான் அன்று வெகுநேரம் குளித்தேன். இருந்தும் என் மனம் புரட்டிக் கொண்டிருந்தது .சாப்பிடும்போது வாந்தி குமுறி எழுந்தது.அவர் உருவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் சீழ்வாடை நாசியை தாக்கியது.
முத்துவிடம் இப்போதைய பண்டார சன்னிதி எங்கே ? ‘ என்றேன்.
‘சதா ஊர்சுற்றல்தான். ‘என்றார் .இப்போது சென்னையிலிருக்கக் கூடுமாம்.பெரிய இடத்து பையன்களுடன் சகவாசம் .பண்டாரத்துக்கு இது சரிவருமா ? ‘நாம் எப்படி சொல்ல முடியும் ?அவராயிற்று சீடர்களாயிற்று , மடமாயிற்று ‘
‘நீங்களும் சீடர்தானே ? ‘
‘நானா ?நல்ல கதை நமக்கு சோறு கண்ட இடம் சொந்த இடம் ‘
‘பாயாசமும் இருந்தால் சாட்சாத் கைலாசம்தான் ‘ என்றார் அப்பையர் . முத்து உற்சாகமாக தலையை உருட்டியபடி சிரித்தார் .
மடம் மிகவும் மாறியிருந்தது .நிறைய அறைகளை இடித்து புதிதாக கட்டியிருந்தார்கள் . சிமிட்டி பூசப்பட்ட சுவர்கள் .ஆனால் கதவுகள் அதே சரித்திரகால களையுடன் இருந்தன.அலங்கார உத்தரங்களில் குழல்விளக்குகள் .வார்னீஷ் வாடை. பிளாஸ்டிக் பக்கெட்டும் பித்தளை உத்தரணியும் என்று ஒரே குழப்பமாக இருந்தது . சுவடிகள் என்ன ஆயின என்று அப்பையரிடம் கெட்டேன். பெரிய பண்டாரம் அவற்றை தன்னுடன் சேர்த்து சிதையில் வைத்துவிட ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார் .சுவடி அறையில்தான் இப்போது மடத்தின் ஜெனரேட்டர் இருக்கிறதாம். ‘புது குருமகா சன்னிதானம் ஏ ஸி இல்லாமல் தூங்காது ‘
மகாசன்னிதானத்தின் கால் அன்று மடம் முழுக்க இருப்புணர்த்தியிருந்ததாக எனக்குபட்டது .சீழ்வாடை நாளாக ஆக என்னை அதிகமாக தக்க ஆரம்பித்தது .சோற்றில் குடிநீரில் காற்றில் சீழ்வாடை ததும்பியிருந்தது . மொத்த கட்டிடமே சீழ் பிடித்து அழுகிக் கொண்டிருப்பது போல இருந்தது .சன்னிதானமோ என் மீது மேலும் பிரியத்தை கொட்ட ஆரம்பித்தது .அவர் கேட்டுக் கொள்ளும்போதெல்லாம் அவரது படுக்கையருகே சென்று அமர்ந்து கொள்வதுதான் எனக்கு பெரிய இம்சையாக இருந்தது .
அந்த காலை துண்டித்துவிடக்கூடாதா என்று அன்றொருநாள் அப்பையரிடம் கேட்டேன் . வேறு யாரிடமாவது கேட்டு தொலைக்காதே என்றார் அவர் . ஆரம்பத்தில் கட்டைவிரலில் சிறிய ரணமாகத்தான் இருந்ததாம். சர்க்கரைவியாதிவேறு .அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை .ஏதாவது விஷமுள் குத்தியிருக்கலாம். கட்டைவிரலை எடுத்துவிடவேண்டும் என்றார் டாக்டர் ,ஆனால் சன்னிதானம் சம்மதிக்கவில்லை . கெஞ்சாத ஆள் இல்லை.பிரயோசனமில்லை.சீழ் பரவி மேலேறியபோது ஆரம்பகட்டத்தில் அவர் போட்ட அலறலில் மடத்துச் சுவர்கள் இரவுபகல் அதிருமாம் . தூங்குவதற்கு மற்றவர்கள் வேறு இடத்துக்கு போய்விடுவார்களாம்.பிறகுதான் அபினும் கஞ்சாவும் கடைசியில் பெத்தடினும் தர அரம்பித்தது .மட்டுமல்ல , வலியும் இம்சையும் அவருக்கும், அலறலும் கூக்குரலும் மற்ரவர்களுக்கும் பழகிபோய்விட்ட்னவாம் . ‘பெரிய சன்னிதானம் காலை இழக்க மறுத்துவிட்டதற்கு என காரணம் தெரியுமா ? ‘என்று அப்பையர் என் காதில் கேட்டார். ‘அங்கவீனம் மடாதிபதியாக இருக்க கூடாது என்று சாஸ்திரம் இருக்கிறது ‘
அதன் பிறகு இரண்டுநாள் கழித்து நான் மடத்தை விட்டு ஓடிப்போனேன்.நள்ளிரவில் .பகலில் யாரும் காணாமல் போக முடிந்திருக்காது . பெரிய சன்னிதானத்திடம் விடைபெற்று போவது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று . மடத்தின் முன்வாசலை நான் இரவில் ரகசியமாக திறந்தபோது அது கூச்சலிட்டது .என் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது .இருளில் எங்கோ ஒரு பூனையின் வினோதமான உறுமல்.- அல்லது அழுகை -கேட்டபடி இருந்தது .கதவைமெல்ல திறந்தேன்.குளிர்ந்த காற்று சட்டென்று விடுதலை உணர்வை அளித்தது .மெல்ல வெளியே காலடி எடுத்து வைத்தேன்.திடாரென்று அந்த உறுமல் ஒலியுடன் சில வார்த்தைகளும் கேட்டன. சட்டென்று நான் அதை அறிந்தேன். அது சன்னிதானத்தின் குரல்.கடவுளே தினம் இரவுதோறும் நான் அரைத்தூக்கத்தில் கேட்ட ஒலி இதுதானா ?என் முதுகெலும்பு சொடுக்கிகொண்டது .அங்கே அப்படியே நின்று தவித்தேன். பண்டார சன்னிதியை சிச் ருஷைசெய்தபடி அவருக்கு அன்பையும் கனிவையும் அளித்தபடி அங்கேயே தங்கினேன். அவருடைய இறுதி கணங்களில் உடனிருந்தேன். அவர் கண்களில் நீர் வடிய என் மடியில் தலைவைத்தவராக எனக்கு ஆசியளித்தபடி உயி
ர்துறந்தார். அவர் பெரிதும் விரும்பியிருந்த இறுதிக்கிரியைகளை அவருக்காக நான் ஆற்றினேன். அத்தனையும் ஓரிரு நொடிகளுக்குள் முடிந்து அங்கேயே நின்றிருந்தேன்.அந்த முனகல் அப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது .போவதா வேண்டாமா என்று நான் தடுமாறும்போது அந்த உக்கிரமான வலிக்கூச்சல் என்னை அதிரச்செய்தது. அக்கணமே அங்கிருந்து ஓடி திறந்தவெளியை அடைந்துவிடவேண்டும் என என் மனம் கூவியது .இருட்டில் கண்மூடித்தனமாக இறங்கி ஓடினேன். முற்றத்தில் இருட்டோடு இருட்டாக படுத்திருந்த கரிய பசு மீது முட்டிக் கொண்டேன்.விழவில்லை .அது புஸ்ஸ் என்று சீறியது .திடுக்கிட வைக்குமளவுக்கு அதன் கண்கள் மினுங்கின. அது எழ முயலவில்லை, இருட்டுக்கு பழகிப்போன ஜீவன்…
தார்ச்சாலையை அடைந்தபின்பே என் மூச்சு திரும்ப வந்தது . திரும்பிப் பார்த்தபோது கட்டிடம் நிழலாகதெரிந்தது .அதன்மீது ஏறி சடைபறக்க நடனமிடும் ராட்சசி போல ஆலமரம்.
பெரியபண்டார சன்னிதி கடசியில் மிகவும் கஷ்டப்பட்டுதான் உயிர்துறந்தார் என்று முத்து கூறினார்.நரம்புகளை சீழ் எட்டிவிட்டதாம்.மூளையும் தாறு மாறாகிவிட்டது . கடைசி சில மாதங்கள் உடம்பெல்லாம் ரத்த குழாய்கள் புடைத்து , நீலம் பாரித்து, சதைகள் முறுக்கிக் கொள்ள, இம்சையின் எல்லையில் துடித்தாராம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகவில்லை.வெளியாட்கள் எவரையும் உள்ளே விடவில்லை . மடத்தின் பெயர் கெட வேறென்ன வேண்டும் ?
பெரிய பண்டார சன்னிதி படுத்து உயிர்விட்ட டென்னிஸ் மேஜை போல விரிந்த பழங்கால மரக்கட்டிலை பார்த்தேன்.கொசுவலை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது .
பிசுக்கு படிந்த கரிய மரச்சாமான்கள் நிரம்பிய பழைய அறை , அங்குதான் கடைசியாக நான் பெரிய சன்னிதானத்தை பார்த்தேன், கெளபீனதாரியாக படுத்திருந்தது . தலையணைமீது அந்த கால் வைக்கப்பட்டிருந்தது .மெலிந்த தேமல் படர்ந்த உடல் .சடைதலையணைமீது பரவிக்கிடந்தது .உடம்பு அடிக்கடி வலியால் முறுக்கி நெளிந்தது .நான் வெகுநேரம் நிறவேண்டியிருந்தது . பின்பு வலியின் தீவிரத்தில் உதடுகளை அழுந்தக்கடித்தபடி பண்டாரம் என்னை பார்ஹ்த்தது .பார்த்தபடியே படுத்திருந்தது .
‘எதற்கு கூப்பிட்டார்கள் ? ‘
‘ஒன்றுமில்லை ‘என்றபடி பெருமூச்சு விட்டார். ‘நீ போய்விடாதே… ‘
‘சரி ‘ ‘என்றேன்
‘ ‘இங்கேயே இரு அதிகம் போனால் இனி இரண்டு மாதம் , அதற்குள் நான் போய்விடுவேன் ‘
எனக்கு பயமாக இருந்தது , நான் ஒன்றும் கூறவில்லை அவர் ‘என்னை இங்கு எவருக்குமே பிடிக்கவில்லை .அன்பு என்பது இங்கு யாருக்குமே தெரியாது .என்னை தூக்கிச் சாத்த காத்திருக்கிறார்கள் ‘என்றார் .
நான் நின்று தவித்தேன் .என் மனம் உருகிக் கொண்டிருந்தது ‘ நீ இங்கு வந்தது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா ? ஆனால் நீ புத்திசாலி.புத்திசாலியால் யாரையுமே நேசிக்கமுடியாது .நீமட்டும் சின்னபையனாக இருந்தாயென்றால் எத்தனை நன்றாக இருக்கும்! போகரிலே ஒரு லேகியம் சொல்லியிருக்கிறது . முதிர்ச்சியே இல்லமல் பண்ணிவிடுமாம். அதை சற்று அதிகமாகவே உனக்கு தந்து சின்னப்பையனாக பண்ணிவிடுவேன்.. ‘தத்தளித்த கண்கள் என்மீது படிந்திருந்தன.பித்து தெளியும் கண்கள்.என் மனசுக்குள் பரிதாபமும் அருவருப்பும் திகட்டி திகட்டி வந்தன.
‘ ‘அன்றைக்கு நீங்கள் ஓடிபோனீர்கள் என்று தெரிந்ததும் பெரியச்சாமி அழுதார் ‘ ‘ என்றார் முத்து என் மனம் திடுக்கிட்டது .–நான் அதைவிட அதிகமாகவே எதிர்பார்த்தேன் என்றாலும்கூட! சன்னிதானத்தின் மரணத்தை பேப்பரில் வாசித்த நாள்முதல் எனக்குள் குடியேறியிருந்த குற்றவுணர்வு தான் அது . ஆனால் அதை பிறர் கூறிக்கேட்டபோது ஓங்கி அறையப்பட்டதுபோல உணர்ந்தேன்.
‘ ‘சிறிய சன்னிதானம் எப்படி ? ‘
‘ ‘இருக்கு அழுகப்போவது கால் இல்லை ‘
நான் உள்ளூர பயந்துவந்தது சரிதான்.நான் இன்னமும் அவிசுவாசி கூட ஆகவில்லை .அப்படி நம்பமுயன்றுகொண்டிருக்கிறேன்.விசுவாசத்தைஊட்டக்கூடியதாக எதையோ தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். இல்லாவிடில் என் மனம் ஏன் துடிக்க வேண்டும் ?
விடைபெற்ற போது அப்பையர் வாசல்வரை வந்தார்.சிரித்தபடி முகமன் சொன்னார். சீக்கிரமே கலியாணம் செய்துகொள்ளும்படிக் கோரினார். பிறகும் ஏதோபேசவிரும்புவது போலிருந்தது அவரது முகம்.
‘ ‘வரட்டுமா ‘ ‘என்றேன் , கேளுங்கள் என்ற பொருளில் புன்னகைத்தபடி .
‘ ‘தம்பியிடம் ஒன்று கேட்கவேண்டும் , தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது ‘
‘சொல்லுங்கள் ‘ என்றேன் . என் முகம் மாறுதல் அடைய தொடங்கியிருக்கவேண்டும்.
‘ ‘அன்றைக்கு ஏன் பயந்து ஓடினீர்கள் ? ‘
நான் யோசித்து ‘மரணத்தை கண்டு பயந்துதான்.. ‘ என்றேன் .
அப்பையருக்கு அந்த பதில் திருப்தியை தந்திருக்க வேண்டும் . ‘ ‘வாங்க ‘ ‘ என்றார் அன்புடன்
விடைபெற்று சாலையில் சற்று தூரம் நடந்தபின்பு திரும்பிபார்த்தேன்.அப்பையர் அங்கேதான் நின்றிருந்தார் .ராட்சசி இப்போதும் மடத்தை அணைத்திருந்தாள்- கைகளாலும் சடைகளாலும்.
நான் பயந்தது மரணத்தை அல்ல . அன்று பெரிய சன்னிதானத்திடம் காலைமுறிக்க சம்மதித்திருக்கலாமே என்றேன்.மடாதிபதி ஸ்தானம் போனால் நாய்படாத பாடுபட்டு சாகவேண்டியிருக்கும் , ஈமக்கிரியைகள்கூட யாரும் செய்யமாட்டார்கள் , அதற்கு இந்த இமசையே மேல் என்றார் .மூச்சிரைத்தபடி கம்மி உடைந்த குரலில் ‘காலை முறித்துவிட நான் சம்மதிப்பேன் என்று அவன் எண்ணியிருக்கலாம் ,ஊராரின் பின்பலமும் இருக்கிற தைரியம் அவனுக்கு . விஷம் வைத்துவிட்டான். பாவி !படுபாவி! ‘ என்று விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். ‘யார் ? ‘ என்றேன் குரல் நடுங்க . ‘சின்ன சன்னிதானம்தான் வேறுயார் ? ‘ என்றது பண்டார சன்னிதி.

ஜெயமோகன்