Wednesday 28 December 2011

சதுரகிரி மலைப்பயணம்

              



















                                                                                                                                                                                                                     

                                               



                                                                                                                                                                                                                                                                          

Friday 23 December 2011

Vanchinathan

Vanchinathan (1886 – June 17, 1911), popularly known as Vanchi, was an Indian Tamil independence activist. He is best remembered for having shot dead Ashe, the Collector of Thirunelveli and having later committed suicide in order to evade arrest.

                                              
Personal life
Vanchinathan was born in 1886 in Shenkottai to Raghupathy Iyer and Rukmani Ammal. His actual name was Shankaran. He did his schooling in Shenkottai and graduated in M.A. from Moolam Thirunal Maharaja College in Thiruvananthapuram. Even while in college, he married Ponnammal and got into a lucrative Government job.
Freedom Movement
On June 17, 1911, Vanchi assassinated Ashe, the district collector of Tirunelveli, who was also known as Collector Dorai. He shot Ashe at point-blank range when Ashe's train had stopped at the Maniyachi station, en route to Madras. He committed suicide thereafter. The railway station has since been renamed Vanchi Maniyachi.
Vanchi was a close collaborator of Varahaneri Venkatesa Subrahmanya Iyer (normally shortened to V.V.S.Aiyar or Va.Ve.Su Iyer), another freedom fighter who sought arms to defeat the British. He trained Bharatha matha Association. Vanchinathan to execute the plan in all perfection. They belonged to Bharatha matha Association.

Wednesday 14 December 2011

Chennai Book Fair

Chennai Book Fair or Madras Book Fair is an annual book fair organized in the Chennai, India by the Booksellers and Publishers Association of South India (BAPASI). The fair typically lasts for about 10 days during the New Year-Pongal season. The fair is usually held between the last week of December and the third week of January.

                                          

The Chennai Book Fair is one of the biggest book fairs in the country with almost all major publishers of India participating in it. The Chennai Book Fair is considered to be one of the biggest events in the Chennai cultural calendar along with the Chennai music season.
History
The 1st Madras Book Fair was organized in Madras between December 14 and December 24, 1977 by The Booksellers and Publishers Association of South India(BAPASI), an association with major publishing companies of Tamil Nadu especially Madras & South India. The 1st Madras Book Fair had 22 stalls and was held at the Madrasa-I-Azam school. The first six book fairs were successful mainly due to the efforts of K. V. Mathew of BI Publications who was responsible for the growth of the book fair in its early years.
The early editions were held in the last weeks of December and ended in the first week of January in order to coincide with the Christmas-New Year holidays. However, in the late nineties, the fair was moved to mid-January to coincide with the Pongal festive season.
Features
The Chennai Book Fair is considered to be one of the biggest events in the Chennai cultural calendar along with the Chennai music season. In addition to book stalls, there are food and refreshment stalls to serve the needs of hungry visitors. Regular debates, contests and speeches are held at the venue. In recent times, movie clippings of films of international renown are filmed at the venue of the fair. Annual awards to the best writer and the best publisher are given at the fair.

Tuesday 6 December 2011

Veetrirundha Perumal Temple

Location: Thirumazhisai
Main Deity:
Veetrirundha Perumal
Other Deities:
Shenbagavalli
Thirumazhisai is a town in Thiruvallur district in the Indian state of Tamil Nadu. Thirumazhisai is on the way to Thiruvallur district.
                                                         
This temple of Maha Vishnu in a rare sitting posture tucked in a tiny hamlet in Tamil Nadu has attracted many devotees and fulfilled their wishes.
There are many important places of pilgrimage, or temples dedicated to Lord Vishnu or his incarnations, which attract a number of devotees all the year around. Sri Veethirundha Perumal Temple at Tirumazhisai is one such ancient attraction.
Others Temples in Thirumazhisai:
Thirumazhisai is a punniya sthalam and has a lot of temples. To list a few of the temples
1. Thirumazhisai Aazhwar temple: Also known as Jagannatha Perumal temple. One of the twelve Alvars of Vaishnavism was born in Thirumazhisai hence was called as Tirumazhisai-aazhvaar.
2. Othandeeswar temple: A shiva temple kai thanda pran [devotee who gave his hand]. It is told that this temple was built at this site as Lord Shiva showed himself here to the devotee (King Kulothunga Chola) who cut off his hand when he accidentally used his sword to cut the climbers on the Lingam to pave way

Monday 5 December 2011

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?

ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா?

இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் விசித்திரமான ஒரு சிக்கலில் உள்ளோம். நவீனக்கல்விமுறை நம்முடைய தர்க்கபுத்தியைப் பெருமளவுக்கு வளர்த்துள்ளது. அது நம்மை நிரூபணவாத அறிவியலின் ஆதரவாளர்களாக வைத்திருக்கிறது. ஆனால் இந்தக்கல்வி என்பது வாழ்க்கையை, பிரபஞ்சத்தை, நம் உடலைப் புரிந்துகொள்ளுமளவுக்கு முழுமையாகவும் இல்லை.புரிந்துகொள்ளாதவற்றை நம்மால் நம்ப முடியவில்லை. புரிந்துகொள்ளுமளவுக்கு நமக்குக் கல்வியும் வாழ்க்கைச்சூழலும் இல்லை.
ஏன் அந்தச்சிக்கல்? நம்முடைய மரபு மனிதவாழ்க்கையை இரு பிரிவாகப் பிரித்து வைத்திருக்கிறது. அடிப்படையான மானுட இயல்புகளைக்கொண்டு இந்தப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஞானமார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், கர்ம மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். ஞானம்- கர்மம் என்ற இப்பிரிவினை இந்திய சிந்தனையின் ஏறத்தாழ எல்லாத் தளங்களிலும் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம்
வாழ்க்கையை முழுமையாக வாழ விழைவது என கர்ம மார்க்கத்தைச் சொல்லலாம். அது செயலின் வழி. இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய வழிகள் என்னென்ன என்று முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை நம்பி ஏற்று முழுமையாகக் கடைப்பிடிப்பதே கர்மத்தின் பாதையாகும். அதில் நம்பிக்கையும் கட்டுப்பாடும்தான் முக்கியமான இடம் வகிக்கின்றன.
                                                       
மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குக் கர்ம மார்க்கமே உகந்த வழியாக இருக்கமுடியும் என்பதே முன்னோர்களால் கண்டறியப்பட்ட உண்மை.சரியானதெனக் காட்டப்பட்டுள்ள பாதையில் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் முன் செல்வது அது. காரணம் அனேகமாக மக்கள் அனைவருக்கும் லௌகீக வாழ்க்கையே முக்கியமானது. அதன் இன்பங்களையும் வெற்றியையும் நிறைவையுமே அவர்கள் தேடுகிறார்கள். கர்ம மார்க்கமே அதை அளிக்க வல்லது.
பக்தி, வழிபாடு போன்றவையே இங்கே கர்ம மார்க்கிகளுக்கான ஆன்மீகமாக முன்வைக்கப்பட்டன. நம்பிக்கை,சடங்குகள்,ஆசாரங்கள் ஆகியவற்றாலானதே பக்தி.நம்மிடையே பிரபலமாக உள்ள செமிட்டிக் மதங்கள் கர்ம மார்க்கத்தை மட்டுமே முன்வைக்கின்றன. உறுதியான, முழுமையான நம்பிக்கையை மட்டுமே அவை வழியாகச் சுட்டிக்காட்டுகின்றன.
        
                                                         
இரண்டாவது வழி ஞான மார்க்கம். அது நம்பிக்கையின் வழி அல்ல. அறிதலின் வழி. ஆராய்தலின் வழி.வாழ்க்கையை வாழ்வதை விட வாழ்க்கையை அறிவதும் கடந்துசெல்வதுமே அதற்கு முக்கியம்.வாழ்க்கையை அறிவதற்காக வாழ்க்கையை இழப்பதற்கும் துணிபவனே ஞான மார்க்கி. அவனுக்கு லௌகீக வாழ்க்கையின் வெற்றியும் நிறைவும் முக்கியமல்ல. அவனுடைய வெற்றியும் நிறைவும் அவன் அடையும் ஞானத்தில் மட்டுமே உள்ளது.
ஞானமார்க்கம் மிகமிகச் சிலருக்கே உரியது. அவர்களால் மட்டுமே லௌகீகத்தை விட ஞானத்தை முதன்மையாகக் கொள்ளமுடியும். ஆகவேதான் இந்து மரபில் கர்ம மார்க்கம் எப்போதுமே பெரும்பாலானவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஞானமார்க்கம் பல தடைகளுக்கு அப்பால் சென்றடையவேண்டிய ஒன்றாக வைக்கப்படுகிறது. ஒருவன் ஆழ்ந்த சுயபரிசோதனைகள் வழியாக உண்மையிலேயே அவனுக்குத்தேவையானது ஞானம்தானா என்று அறிந்து தெளிந்தபின்னரே ஞானமார்க்கத்தைக் கண்டடையவேண்டுமென சொல்லப்படுகிறது.
இதனால்தான் இந்து மதத்தில் கோயில்களும் வழிபாடுகளும் அனைவருக்கும் உரியவையாக முன்வைக்கப்பட்டன. ஞானநூல்கள் குரு வழியாகக் கற்கப்பட்டாலே சிறப்பு என வரையறைசெய்யப்பட்டன. தியானமும் யோகமும் குருமுகத்தில் இருந்து மட்டுமே அறியப்படவேண்டும் என்று வகுக்கப்பட்டன. [விஷ்ணுபுரம் வாசிக்கிறீர்கள் என்பதனால் சொல்கிறேன். பிங்கலனுக்கும் அவன் குருநாதருக்குமான விவாதத்தில் இவ்விஷயம் பேசப்படுகிறது]
இத்தகைய கர்மம்- ஞானம் என்ற பிரிவினை சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இன்னும் துல்லியமாகவும் அப்பட்டமாகவும் செய்யப்பட்டிருந்தது. ஞானத்தை முதன்மையாகக் கொண்டவர்களே துறவிகளாகவும் பிட்சுகளாகவும் ஆகவேண்டும். ஞானத்துக்காகப் பிற அனைத்தையும் துறந்து விடவேண்டும். பிறர் அடிப்படையான நெறிகளையும் ஆசாரங்களையும் பின்பற்றி இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
                                                     
இந்தப் பிரிவினை இந்தியாவில் நெடுநாட்களாக இருந்து வந்தது. நவீனக்கல்வி என்ன செய்கிறதென்றால் இளமையிலேயே நம்முடைய தர்க்கபுத்தியை வலுவானதாக ஆக்கி நம்முடைய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது. பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய மனநிலை இல்லாமலாகிவிடுகிறது. ஒவ்வொன்றையும் காரண காரிய அறிவுடன் புரிந்துகொள்ளவேண்டிய ஆவலை உருவாக்கிவிடுகிறது.
அதேசமயம் ஞானத்தை முதன்மையாக ஆக்கிக்கொண்டு, லௌகீகத்தை உதறி , தேடலையும் அறிதலையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழவும் நாம் தயாராக இல்லை. நாம் விழைவது லௌகீகத்தை மட்டுமே. ஒருவன் விழைவது நல்ல குடும்ப வாழ்க்கையும், நல்ல தொழிலும், நல்ல உறவுகளும்,ஆரோக்கியமும்தான் என்றால் அவன் அழுத்தமான நம்பிக்கையுடன் ஆலயத்துக்குத்தான் செல்வதே மதம் காட்டும் வழி. ஆனால் அப்படிப்பட்ட லௌகீக விழைவுள்ள ஒருவனால் ஆலயத்துக்கு நம்பிச்செல்லமுடியவில்லை என்றால் என்ன செய்வது?
சாதாரணமாக மனிதர்கள் இளமைப்பருவத்தைத் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்களையும் தற்செயல்களையும் சந்திக்கும் தருணத்துக்கு வரும்போது, தங்கள் தர்க்கபுத்தியின் எல்லைகளைத் தாங்களே உணர்ந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதே வழக்கம். மிகச்சிலரே அப்படி உருவாக்கிக்கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

 அவர்களுக்காகவே ஜக்கி,ரவிசங்கர் போன்ற நவீனகுருமார்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் பணியை ஞான-கர்ம சமுச்சயம் என்று சொல்லலாம். லௌகீக விழைவுடன் ஆனால் ஞானத்தின் வினாக்களுடன் இருப்பவர்களுக்கு ஒரு நடுப்பாதையை அவர்கள் உருவாக்கி அளிக்கிறார்கள்.ஞானமார்க்கத்தின் வழிகளையும் விடைகளையும் எளிமைப்படுத்தி கர்மமார்க்கத்தில் செல்பவர்களுக்கு அளிக்கிறார்கள்.அதற்கான தேவை உள்ளது என்பதையே அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் செல்வாக்கு காட்டுகிறது.
இந்த நவீன குருமார்களை நம்பிச்செல்பவர்களை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருப்பவை லௌகீகமான பிரச்சினைகள். மன அமைதியின்மை, சோர்வு, உடல்நலக்குறைவு, உறவுச்சிக்கல்கள். அவற்றை அவர்கள் அறிவார்ந்து புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதாவது தங்கள் தர்க்கபுத்திக்கு நிறைவளிக்கும் ஒரு விடையை ஒரு குரு சொல்லவேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.
ஆகவே ஞானமார்க்கத்தில் இருந்து குரு லௌகீக தளத்திற்கு வந்தாகவேண்டியிருக்கிறது. ஞானம் தேடும் சீடனைக் கைப்பற்றி அழைத்துச்செல்லவேண்டிய குரு என்ற ஆளுமை லௌகீக வாழ்க்கை சார்ந்த விளக்கங்களைச் சொல்பவராக உருவம் கொள்ளவேண்டியிருக்கிறது. ஞானம்தேடுபவர்கள் சிலர் என்றால் லௌகீகமான விளக்கமும் வழிகாட்டலும் தேடுபவர்கள் பலகோடி. ஆகவே அவர் தன் குரல் அனைவரையும் சென்றடைவதற்காக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் கார்ப்பரேட் குரு என்ற முத்திரை விழுகிறது
நீங்கள் சொல்லும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தத் தளம் சார்ந்தவை மட்டுமே. உதாரணமாகக் கட்டணம். இந்த குருக்களை நம்பி வரக்கூடியவர்கள் எளிமையான லௌகீக மனம் கொண்டவர்கள், லௌகீகமான பிரச்சினைகளுக்காக வருபவர்கள். ஞானம் தேடிவரும் முமுட்சுக்கள் அல்ல. அவர்களின் மனநிலை ஒரு பயனுள்ள சேவையை வாங்கிப் பயன்படுத்துவது என்ற அளவில்தான் உள்ளது. அதற்கு அவர்கள் அளிக்கும் பணமே அவர்களைப்பொறுத்தவரை அவற்றின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. அது மட்டும் இலவசமாக அளிக்கப்பட்டால் அவர்கள் கண்ணில் அது பயனற்றதாகவே இருக்கும்.
யோகம் தியானம் போன்றவை குறைந்தபட்சம் சிலமாதங்களேனும் தொடர்ச்சியாகச் செய்யவேண்டியவை. நான் அவதானித்தவரை இந்த குருக்களின் உயர்ந்த கட்டணம் காரணமாகவே பலர் அதைக் கொஞ்சகாலம் தொடர்ந்துசெய்கிறார்கள் -காசு கொடுத்து வாங்கியதாயிற்றே. அதனால்தான் பலருக்கு அது பலனளிக்கிறது. மலிவாகக்கொடுக்கும்தோறும் நான்குநாள் சென்று உட்கார்ந்துவிட்டு சில்லறை விமர்சனங்களுடன் கிளம்பி வருபவர்களே வந்து குவிவார்கள். என்னுடைய கருத்து இன்னும்கூடக் கட்டணம் அதிகமாக வைக்கலாம் என்றுதான். ஒரு எளிய மருத்துவத்துக்கு ஆகும் செலவுகூட இப்போது இந்த தியானமுறைகளுக்கு ஆவதில்லை.
இன்னொன்று குருவைக் கடவுளாக ஆக்கும் போக்கு. அதுவும் இந்த லௌகீகமான மனநிலையில் இருந்து வருவதே. அந்த குரு நினைத்தால்கூட அதைத் தவிர்க்கமுடியாது. வருபவர்கள் லௌகீகமானவர்கள், கர்ம மார்க்கத்துக்கான மனநிலையும் பக்குவமும் கொண்டவர்கள். சம்பிரதாயமான கடவுள் வடிவங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் கொஞ்சம் தர்க்கபூர்வமான கடவுளை அவர்கள் நாடுகிறார்கள் அவ்வளவுதான்.
இந்த யோகப்பயிற்சிகளினால் பலன் உண்டா என்று என்னிடம் எப்போதும் நண்பர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலன் என்பது அவற்றைக் கடைப்பிடிப்பவர்களைப் பொறுத்தது என்பதே என்னுடைய பதில்.இந்த வழிமுறைகள் நெடுநாட்களாக நம் மரபில் இருந்துகொண்டிருப்பவை. பல தளங்களில் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டவை. அவற்றை சமகாலத்தேவைக்காக சீர்ப்படுத்தி இந்த குரு அமைப்புகள் சீடர்கள் மூலம் கற்பிக்கின்றன. அவற்றை முறையாகக் கற்றுக்கொள்வதும் கடைப்பிடிப்பதும் கண்டிப்பாக உரிய விளைவுகளை அளிப்பதுதான்.
யோகம் என்பது உள்ளை அறிவது. இந்தவழிமுறைகளை applied yoga என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்நிலையிலேயே அவை ஒருவரைத் தன்னுடைய அகத்தைத் தானே காணவும் அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் உதவக்கூடும். அந்நிலையில் அவை உடல்சார்ந்த நோய்களைத் தீர்க்கமுடியும்.
தர்க்கபூர்வமான காரணம் இதுதான். இந்திய சிந்தனைமுறை உடலையும் மனத்தையும் பிரித்துப்பார்ப்பது அல்ல. உடல்மனம் என்ற ஒரே அமைப்பாகவே அது மனிதனைப் பார்க்கிறது. ஒரு மனித இருப்பை ஏழு அடுக்குகள் கொண்டதாக அது உருவகிக்கிறது. உடல் முதல் அடுக்கு மட்டுமே [அன்னமயகோசம்]. உயிர், மனம், ஆழ்மனம்,முழுமனம் எல்லாம் பிற அடுக்குகள். உடலின் சிக்கல் உள்ளத்தின் சிக்கலாகலாம். உள்ளத்தின் சிக்கல் உடலிலும் வெளிப்படலாம்.
                                                      
முழுமையான தீர்வை நோக்கிச்செல்லவே உடலையும் மனதையும் ஒன்றாகக் காணும் யோகத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.அவற்றின் சில பயிற்சிகளே இங்கே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. உடலை ஓர் இயந்திரமாக மட்டுமே கண்டு அளிக்கப்படும் சிகிழ்ச்சைகளால் குணப்படுத்தப்பட முடியாத பல சிக்கல்களை இந்த ஒருங்கிணைந்த முறை சரிசெய்திருப்பதை நான் அறிவேன். மீண்டும் சொல்லவேண்டியது இதுதான்.அது இம்முறையைக் கடைப்பிடிப்பவர்களின் கையிலேயே உள்ளது.
இங்கே இந்த வகையான குரு முறைமை உருவாகி வர மூன்று கூறுகள் தேவையாக உள்ளன. யோக வழிமுறைகளை அறிந்த ஒரு குரு, அவரை ஒரு பெரும் படிமமாக ஊடகங்கள் மூலம் முன்வைத்து உருவாக்கும் நம்பிக்கை, அவரைநாடி வரும் கோடிக்கணக்கானவர்களைக் கையாள்வதற்கான கார்ப்பரேட் அமைப்பு. இது இன்றுள்ள தேவையில் இருந்து உருவாகி வந்திருக்கிறது. இந்த தேவை முன்பெப்போதும் நம் பண்பாட்டில் இருந்ததில்லை என்பதனால் இவர்களைப் போன்றவர்கள் முன்பு இருந்ததில்லை.இந்தத் தேவை இருப்பதுவரை இவர்கள் இருப்பார்கள்.
இந்த யோகமுறைகள் நீங்கள் நினைப்பதுபோல வெறும் உடற்பயிற்சிகள் அல்ல. ஆகவே அவற்றைப் பாடத்திட்டமாக ஆக்கி இந்த குருக்களில் இருந்து பிரித்துக் கற்பிக்க முடியாது. இவை ஆழ்மனம் சம்பந்தமானவை.ஆகவே பெரும்பாலும் நம் ஆழத்துக்கனவுகளில் ஊடுருவக்கூடிய படிமங்கள் மூலம் செயல்படக்கூடியவை.அந்த குருவின் ஆளுமை, அந்த முத்திரைகள், அந்த ஒலிகள், அந்த ஆசாரங்கள் எல்லாமே நம் தர்க்கத்தைத் தாண்டி ஆழத்து அடுக்குகளை சென்றுசேரும் படிமங்கள்தான். அந்தப்படிமங்களை உருவாக்கி நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் அமைப்புகளும் ஆசாரங்களும் இல்லையேல் அவற்றால் பயனில்லை.
ஆகவே உங்கள் முன் மூன்றுவழிகள் உள்ளன. நீங்கள் முழுமையாக ஞானத்தின் வழியைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கே நீங்கள் ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருக்கலாம். உங்கள் ஞானத்தேடல் அங்கே உங்களை வழிகாட்டி அழைத்துச்செல்லும். அல்லது நீங்கள் கர்மத்தின் பாதையை தேர்ந்தெடுக்கலாம். முழுமையான அர்ப்பணமும் பக்தியும் உங்களுக்குத் தேவையானவற்றை அளிக்கும். உங்களுக்கு என்ன நிகழ்கிறதென நீங்கள் அறிய வேண்டியதில்லை. அன்னை மடியில் குழந்தைபோல, மருத்துவனை நம்பும் நோயாளி போல இருக்கலாம்.
இல்லை, உங்களுக்கு லௌகீக வாழ்க்கையின் எல்லைக்குள் ஞானமார்க்கத்தின் குருவழிகாட்டல் தேவை என்றால், அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திற்கு நடுவே யோகத்தின் நடைமுறைப்பயன்களில் சில தேவை என்றால் வேறு வழியே இல்லை. ‘சாமியார்களை மதிக்க மாட்டேன் என்பது கொள்கை’ என்பது போன்ற பாவலாக்களை நீங்கள் கைவிடுவதே நல்லது. மதிக்காமல் நீங்கள் அங்கே நீடித்திருக்க முடியாது. உங்கள் அகஆழம் அப்பயிற்சிகளுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கமுடியாது.

Thar Desert

The Thar Desert is a large, arid region in the northwestern part of the Indian subcontinent and forms a natural boundary running along the border between India and Pakistan. With an area of more than 200,000 km2, it is the world's 9th largest subtropical desert.
It lies mostly in the Indian State of Rajasthan, and extends into the southern portion of Haryana and Punjab states and into northern Gujarat state. In Pakistan, the desert covers eastern Sindh province and the southeastern portion of Pakistan's Punjab province. The Cholistan Desert adjoins the Thar desert spreading into Pakistani Punjab province.
                                                              
Basic Facts About the Thar Desert
- 74,000 sq mi
- Also known as the Great Indian Desert
- Borders India and Pakistan
- 4000 to 1,000,000 years old
- 2000 to 1500 BC this is a resent desert
- The home to species of cow, sheep, goats, camel, and ox.
- People grow musterd seed in the desert
- Some trees came be grown in the desert however people grow them for money
- some salt water lakes are in the desert and peole depend on them
- 7th largest desert in the world
- 1974 the Thar desert had its first bomb exploded by the people of india
- filled with brocken rocks and shifting sand dunes
- There is a significent amount of shrub vegitation
- 500 miles long by 250 miles wide
- The hindi people named teh desert this name means radje ridges of sand
- The Thar desert is home to many plants and animals

Thursday 1 December 2011

ஜெயமோகன் கேள்வி-பதில்கள்

காந்திய வழி இந்திய விடுதலையில் எப்படி வெற்றி பெற்றது?, ஆயுதம் ஏந்திய மற்றவர்களால் ஏன் வெற்றிபெற முடியவில்லை?. வெற்றி பெறுவதற்கு ஆயுதபலமும் செல்வமும் போதுமான அளவு இருந்திருந்தால் நேதாஜி இந்திய விடுதலையை சாதித்துருக்க முடியுமா?. அப்படியானால் காந்திய  வழி பலவினர்களின் கொள்கையா?.  இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட கோடானு கோடி மக்களின் அஹிம்சைசார்ந்த முயற்சிகளால் நாம் விடுதலை அடையவில்லையா?. மக்களின் மனோபலத்தைவிட ஆயுதங்களின் பலம் பெரிதா?
இப்போது இணையதளங்களில் வெளிவரும் பல பத்திரிகைகள் உமிழும் இந்திய வெறுப்பு மிகஅச்சமூட்டுகிறது. இன்றைய இளைய சமுகம் இணையதளங்களை பரவலாக பயன்படுத்தும் பட்சத்தில் இத்தகைய தவறுதலான வழிகாட்டுதல்கள்
இந்திய தேசியத்தின் மைய கருத்தையே அசைத்துவிட வாய்பிருப்பதாக படுகிறது.இந்திய தேசியத்தின் மேன்மையை பரப்பும் அறிவியக்கம் வலுவானதாக இருக்கிறதா?.


 உங்கள்மேல் கொட்டப்பட்ட வெறுப்பு மிக இயல்பானது. காந்தியக் கோட்பாடென்பது எப்போதுமே வெறுப்புக்கு எதிரான ஒன்று. ஆகவே எப்போதுமே வெறுப்புதான் அதை எதிர்கொள்கிறது. காந்தி அவர் வாழ்ந்த காலத்திலேயே உச்சகட்ட வெறுப்பு, அவதூறு ஆகியவற்றின் நடுவிலேயே வாழ்ந்தார். அவற்றுடன்தான் அவர் மீண்டும் மீண்டும் உரையாடிக் கொண்டிருந்தார்.
வெறுப்பு எரியும் மனங்களைப்பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக,சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன.அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே
இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று  வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்.
வன்முறை மற்றும் ஆயுதமேந்திய போராட்டங்களில் இருக்கும் ‘மனக்கிளர்ச்சி’ வேறு வகையான சமூகப்போராட்டங்களில் இல்லை. பொதுவாக இவற்றைப்பற்றியெல்லாம் ஆரம்பத்தில் பேசுபவர்கள் தனிவாழ்வில் எந்த வன்முறையையும் எதிர்கொள்ள முடியாத அறிவுஜீவிகளாக இருப்பார்கள். அவர்களின் எளிய அன்றாட அலுப்பை அகற்றும் ஒரு சிந்தனையாக அது இருக்கிறது. தங்களை அதிதீவிரமானவர்களாக சமரசமற்றவர்களாக உருவகித்துக்கொள்ள அது உதவுகிறது. இந்தப்பாவனைக்காக, இது உருவாக்கும் அகங்கார திருப்திக்காக அவர்கள் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவார்கள். அவர்களை பலியிடுவார்கள்.
                                                              
வன்முறை சார்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் மிக எளிதாக தூண்டி விடப்படத்தக்கவை. ஆகவே இரண்டாம்தர அறிவுஜீவிகளும் சுயநல அரசியல்வாதிகளும் அதை உடனடியாகக் கையிலெடுக்கிறார்கள்.  மனிதர்கள் நடுவே மிக மிக எளிதாக பிரிவினையை உருவாக்கலாம். எந்த சமூகத்திலும். மிகச்சிறப்பாக இதை ஹிட்லர் அவரது சுயசரிதையில் விளக்குகிறார். ஒரு மேடையில் ஒருவன் உண்மையிலேயே எதிர்மறையாக உணர்ச்சிவசப்பட்டால் போதுமானது அந்த உணர்ச்சிகளை அவனால் அவனைச்சூழ்ந்திருக்கும் கூட்டத்துக்கு கொடுத்து விட முடியும். அது நியாயமான உணர்ச்சிதானா, அதன் மூலம் உண்மையான பலன்கள் இருக்குமா என்றெல்லாம் அம்மக்கள் எண்ண மாட்டார்கள். அதுவே மனித இயல்பு.
அத்தகைய ‘உண்மையான’ எதிர்மறை உணர்ச்சியை எப்படி அடைவது? பேசுபவன் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக  உண்மையான வெறுப்பை வளர்த்துக்கொண்டாலே போதுமானது. அந்த வெறுப்பு அவனில் இருந்து ஒரு சக்தியாக வெளிப்படும். அதுவே ·பாசிசத்தின் ஆற்றல். வெறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதம் என்பதை நவீன அரசியல் கற்றுக்கொண்டது. அவ்வெறுப்பை உருவாக்க மதம், இனம், இனக்குழு அடையாளம் என எதையும் பயன்படுத்த முடியும் என்று அது அறிந்தது. உலகம் முழுக்க இன்று பெருகும் குருதி என்பதுஅந்த அறிதலில் இருந்து வந்ததுதான். காந்தியம் அந்த வெறுப்பரசியலுக்கு எதிரான மானுட அறத்தின் குரல்.
காந்திய வழியிலான போராட்டத்தின் மூன்று அடிப்படை விதிகள்தான் அதை நூற்றாண்டின் இன்றியமையாத முறையாக ஆக்குகின்றன.
ஒன்று, ஒருபோராட்டம் அந்தபோராட்டத்தை நடத்தும் மக்களுக்குக் கற்பிப்பதாக, அவர்களை மேம்படுத்துவதாக அமையவேண்டும் .எந்த ஒரு சமூகமும் பற்பல கூறுகளினால் ஆனதாகவே இருக்கும். அந்தகூறுகளுக்குள் உக்கிரமன உள்முரண்பாடுகள் இருக்கும். அவர்கள் ஒரு பொது இலக்குக்காக மேற்கொள்ளும் போராட்டமானது அவர்களுக்குள் பரஸ்பர விவாதத்தையும் உரையாடலையும் உருவாக்க வேண்டும். அவர்களின் முரண்பாடுகள் நடுவே இயல்பான சமநிலையை உருவாக்க வேண்டும்.
காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்றுதிரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவேஉள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம்செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப்போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிகநிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது.
இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இந்திய சமூகத்தின் அத்தனை உள்முரண்பாடுகளும் ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு மெல்லமெல்ல சமரசப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னுடைய ஆன்மபலத்தை முழுக்க காந்தி இந்த சமரசத்துக்கே செலவிட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சமரசம் செய்திருக்கிறார். அவர் வரும்வரை உயர்மட்டம் சார்ந்து நடந்து வந்த போராட்டத்தை அடித்தளம் வரைக் கொண்டு சென்றிருக்கிறார். சமூகத்தின் அத்தனை தரப்புகளையும் போராட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்
பல வருடங்களுக்கு முன்பு மூத்த கம்யூனிஸ்டுத்தலைவரான சி.அச்சுதமேனன் என்னிடம் சொன்னார். சுதந்திரப்போராட்டம் வழியாக காந்தி இந்திய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டுவந்தார். இந்தியாவின் கோடானுகோடி அடித்தள மக்களுக்கு அரசியல் பங்கேற்பு என்னும் அதிகாரம் அவர்களுக்கிருப்பதை உணர்த்தினார். அந்த அடித்தளம் மீதுதான் இந்தியாவில் இடதுசாரி  அமைப்புகள் உருவாக்கப்பட்டன என்று. இந்திய தலித் இயக்கமும் அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டதே. அதை அம்பேத்காரும் உணர்ந்திருந்தார்.
ஆக, காந்தி நடத்திய சுதந்திரப்போராட்டம் என்பது உண்மையில் அந்த அரசியல்விழிப்பு இயல்பாகவே கொண்டுவந்த அடுத்த கட்டம் மட்டுமே. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் அரசியலதிகாரத்துக்குத் தொடர்பில்லாமல் தங்கள் மூலைகளில் முடங்கி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். காந்தி அவரக்ளுக்கு அரசியலை வழங்கிவிட்டார். அதன்பின் அவர்கள் அதிகாரமின்றி அமைய முடியாது. அதன் பின் அவர்களை ஜமீன்தார்களும் குறுநிலமன்னர்களும்  அவர்கள் மேல் அமர்ந்து பிரிட்டிஷாரும் ஆள முடியாது.
அதாவது தங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம்  தங்களை அடக்கும் சக்தியை எதிர்கொள்ளும் போராட்டம் அது. தங்கள் குறைகளைக் களைவதன் மூலம் தங்கள் அடிமைத்தனத்தை வெல்லும் போராட்டம். அதுவே காந்திய வழியிலான போராட்டத்தின் முதல் அடிப்படையாகும்
இரண்டாவதாக, பிழைகளைக் களைவதற்கான வழிமுறைகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் இயல்பு காந்தியப் போராட்டத்துக்கு உண்டு. ஒரு போராட்டநிலைபாடு தவறாக இருபதற்கான வாய்ப்பு  எப்போதும் இருக்கிறது. மானுடப்பிழைகள். தத்துவப்பிழைகள். வரலாற்றுப்புரிதலின் பிழைகள். ஒருபோதும் பின்னால் போக முடியாத ஒரு போராட்டத்தின் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.
ஏனென்றால் சமூகப்போராட்டங்கள் கோடானுகோடி மக்களைச் சார்ந்தவை. அம்மக்களின் பல்லாயிரமாண்டுகால வாழ்க்கை. அவர்களின் வரலாறு, பண்பாடு என நூற்றுக்கணக்கான நுண்கூறுகள் அப்போராட்டத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்தையும் புரிந்துகொண்டு அப்பழுக்கற்ற ஒரு போராட்டவழியை உருவாக்குவதென்பது முற்றிலும் இயலாத ஒன்று. ஆகவே முற்றிலும் சரியான ஒரு பாதையும் இருக்கப்போவதில்லை
காந்தி தன் போராட்டத்தை பலமுறை பின்னுக்கிழுத்திருக்கிறார். தான் உத்தேசித்த போராட்டம் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது தான் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றோ எண்ணிய கணமே அவர் பின்னகர்ந்திருக்கிறார். மறுபரிசீலனை செய்திருக்கிறார். மீண்டும் புதிய வழியில் தொடங்கியிருக்கிறார். காந்திய வழியிலான போராட்டத்துக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கிறது
மூன்றாவதாக, வரலாற்றிலும் சமூகச்செயல்பாடுகளிலும் இறுதித்தீர்வு என்ற ஒன்று இல்லை என்ற புரிதல் காந்திய வழிகளின் அடிப்படை தரிசனமாகும். இறுதியான வழி ஒன்றை கண்டடைந்து விட்டேன், அதைத்தவிர வேறெதையுமே ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற நிலை ஒரு அபத்தமான அகங்காரமே அன்றி சமூகத்தையோ வரலாற்றையோ புரிந்துகொண்ட ஒன்றல்ல. காந்தி முரணியக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர். எந்த விசைக்கும் இணையான எதிர்விசை உண்டு. அந்த எதிர்விசையுடனான முரண்பாடும் சமரசமும் அடங்கியதே போராட்டம். எந்தப்போராட்டமும் எப்போதும் எதிர்தரப்புடனான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருந்தாக வேண்டும்.
காந்தி நடத்திய சுதந்திரப்போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன், வேரடி மண்ணுடன், ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ்  ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட  உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக்கோண்டே இருந்தார். அடைந்தார், அடைந்தவற்றை தக்கவைத்துக்கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும்சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார்.
அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும்  அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்.
நான்காவதாக காந்தியப்போராட்டம் என்பது ஒருமுனைகொண்ட ஒன்றாக இருப்பதில்லை. ஏற்கனவே சொன்னதுபோல அது ஒரு மாபெரும் சமூக உருவாக்கமாகவும் இருக்கிறது. ஒரு அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும்போது அந்த அடிமைத்தனத்துக்குக் காரணமாக அமையும் பலநூறு விஷயங்களை கண்டடைந்து ஒவ்வொன்றாக அவர் விலக்கினார். அந்த முனைகளில் எல்லாம அவர் போராட்டத்தைக் கொண்டு சென்றார். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய காந்தி கிராமம் கிராமமாகச் சென்று கக்கூசில் மலம் கழிப்பதைப்பற்றி பிரச்சாரம்செய்தார். கிராமப் பொருளாதாரத்தை  மீட்டமைக்க முயன்றார். மதச்சீர்திருத்தம் செய்ய போராடினார்.
இந்தியாவைச்சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப்போராட்டம் மூலமே இங்கே உருவாகின. அது காந்தியப்போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்.
காந்தியவழிமுறைகளை நிராகரிப்பவர்கள் கடந்த உலகவரலாற்றில் எத்தனை ஆயுதபோராட்டங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல வேண்டும். கொஞ்சம் வரலாற்றுப்பிரக்ஞையுடன் திரும்பிப்பார்ப்பவர்கள் சென்ற நூறு வருடங்களில் உலகத்தில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததோ அங்குள்ள மக்களுக்கு அழிவையன்றி வேறெதையுமே- ஆம்,  எதையுமே–  அவை அளிக்கவில்லை என்பதையே காண்பார்கள். 
அவற்றின் அழிவுத்தன்மைக்குக் காரணங்கள் என்ன என்று நோக்கினோமென்றால் அவையெல்லாமே காந்தியவழிமுறைகளின் சிறப்பியல்பாக நாம் சுட்டும் விஷயங்கள் இல்லாமைதான் என்பதையே காண்கிறோம். பிரம்மாண்டமாக எழுந்து அரைநூற்றாண்டுக்காலம் பல்வேறு சிந்தனையாளர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட ருஷ்ய,சீன புரட்சிகள். அம்மக்களுக்கு அவை அளித்தது என்ன? பேரழிவையும், அடிமைத்தனத்தையும் மட்டும்தானே? அப்பட்டமாக வரலாறு இவ்விஷயத்தை திறந்து வைத்திருக்கிறது இன்று. இருந்தும் நேற்றுவரை அவற்றை நியாயபப்டுத்தியவர்கள் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் காந்தியை குறைகூற வருகிறார்கள்.
ருஷ்ய,சீனப்புரட்சிகள் முதல் இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துவரும் இனக்குழுச்சண்டைகள் வரை அனைத்திலும் நாம் காணும் பொது அம்சம் ஒன்றுதான். அவை தங்கள் உள்முரண்பாடுகளுக்கே ஆயுதங்களை முதலில் பயன்படுத்தின. தங்களுக்குள் கொன்றுகொண்டு அழிந்தன. சந்தேகங்கள், துரோகங்கள்,பேதங்கள் அவற்றின் விளைவான படுகொலைகள். ஆயுதம் எடுத்த எந்த ஒரு அமைப்பும் தன்னைச்சார்ந்தவர்க¨ளையே அதிகமும் கொன்றிருக்கிறது. ருஷ்ய வரலாறானாலும் சரி, சீன வரலாறானாலும் சரி, எந்த ஒரு உலக ஆயுதப்போராட்ட வரலாறானாலும் சரி. ஒரு விதிவிலக்குகூட உலகத்தில் இன்று வரை கிடையாது.
ஏனென்றால் முரண்பாடுகளை சமரசப்படுத்திக்கொண்டு ஒன்றுதிரட்டிக்கொண்டு முன்னகரும் வாய்ப்பை வன்முறை முற்றாகவே தவிர்த்துவிடுகிறது. உரையாடலையே இல்லாமல் செய்துவிடுகிறது. ஆயுதமேந்திய சமூகம் அந்த உரையாடலின்மை காரணமாகவே இறுகி விடுகிறது. அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஆகவே அதன் உள்முரண்பாடுகள் மெல்ல பெருகுகின்றன. அழிவை உருவாக்குகின்றன.
இன்று ருஷ்ய ,சீன பரிசோதனைகளைப் பற்றிப் பேசும்போது சர்வ சாதாரணமாக அவை ‘கம்யூனிச அமலாக்கத்தில் நிகழ்ந்த சிறிய பிழைகளும் பின்னடைவுகளும்’ என சொல்லுபவர்களைக் காண்கிறோம். கோடானுகோடி மக்கள் புழுப்பூச்சிகளைப்போல செத்தொழிந்தார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஆயுதப்போராட்டம் ஒவ்வொரு கணமும் பின்பக்கம் பாலங்களை எரித்தபடியேதான் முன்னகர்கிறது. அழிவை மட்டுமே நம்பி அது இயங்குகிறது. அதன் தவறுகளின் விலை மிகமிக அதிகம். எப்போதும் ஏழை எளிய மக்களே அந்த விலையை கொடுக்கிறார்கள். தங்கள் உயிரால். குளக்குகளை ஒழித்ததும் கலாச்சாரப்புரட்சியும் தவறுகள் என ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் சொல்லாலாம். செத்தொழிந்த மனிதர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
ஆயுதப்போராட்டம் என்பது எப்போதுமே இறுக்கமான விவாதத்துக்கு இடமேயில்லாத இறுதிமுடிவு ஒன்றை எடுத்தபின்னர்தான் முன்னகர்கிறது. ஆனால் எந்த மேதாவியும் எந்நிலையிலும் வரலாறுசார்ந்தும் சமூகம் சார்ந்தும் அப்படி ஒரு முடிவை எடுத்துவிடமுடியாது. ஐம்பதுவருட வரலாற்றை ஒருவன் திரும்பிப்பார்த்தாலே போதும் எத்தனை நம்பமுடியாத திருப்பங்கள். எத்தனை அற்புதமான சாத்தியக்கூறுகள். எத்தனை புதிய விசைகள்…அந்த எல்லையை உணர்ந்த ஒரு போராட்டம் எப்போதும் தன் மறுவிசையையும் கணக்கில் கொண்டதாகவே இருக்கும். எப்போதுமே அது ஓர் உரையாடலாகவே இருக்கும்.
காந்திய வழிமுறை விவாதத்தை அனுமதிக்கிறது என்பதனாலேயே அதைப்பற்றிய எல்லா கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்தைப்பற்றி இன்றுகூட நம்மிடையே சீரான பதிவுகள் இல்லை. சுபாஷ் ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் போகவில்லை. அவரை அன்றைய உலக சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. அவரது இயக்கத்துக்குள் உக்கிரமான வடக்கு தெற்கு பாகுபாடுகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அவரது ஆயுதப்போராட்டம் என்பது ஒரு பெரும் கேலிக்கூத்தாகவே கடைசியில் முடிந்தது. ஜப்பானியர்களின் எடுபிடிகளாகவே அவரது படைகள் இருந்தன. அதிகார பூர்வ ஆவணங்களின் படி ஐ.என்.ஏ எத்தனை போர்முனைகளில் நேரடியாக போர் செய்தது ? ஒரே ஒரு போர்முனையில்தான்!
அனைத்தையும்விட முக்கியமான ஒன்று உண்டு. எந்த மக்களுக்காக சுபாஷ் ஆயுதமேந்தினாரோ அந்த மகக்ளின் ரத்தத்தின் மேல் நடந்துசென்றார் அவர். சயாம் மரண ரயில் பாதைத்திட்டத்தில் பல லட்சம் எளிய தமிழர்கள் இந்தியர்கள் செத்தழிவதை அவர் மீண்டும் மீண்டும் கண்டார். அந்த மானுட அழிவைப்பற்றி அவரது மனசாட்சி  மௌனமாகியது. அந்த தகவல் காந்திக்கு தெரிந்திருக்குமென்றால் காந்தி அந்த மௌனத்தை  கொண்டிருப்பாரா?
                                                            

இந்நூற்றாண்டின் உலக அரசியலைப் பார்த்தால் நாம் காண்பது அர்த்தமில்லாது நடத்தப்படும் போராட்டங்களின் பேரழிவை. இவை பெரும்பாலும் சில அறிவுஜீவிகளினால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு அதிகார சக்திகளினால் வளர்க்கப்படுகின்றன. பின்னர் அகங்காரங்களால், அதிகாரவிருப்புகளால், அதன் பொருட்டு உருவாக்கப்படும் வெறுப்புகளால், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடரும் வன்முறைகளால் நீடிக்கின்றன.
இந்தக்கணம் ஆப்ரிக்காவில் குறைந்தது பதினைந்து நாடுகள் உள்நாட்டுப்போர்களால் முழுநிர்மூலமாகியிருக்கின்றன. காங்கோ, சோமாலியா, எதியோப்பியா, சியரா லியோன், ரவாண்டா என மானுட ரத்தம் ஆறாக ஓடிய நாடுகளின் பட்டியலை நாம் போட முடியும். இந்த உள்நாட்டுப்போர்களுக்கான காரணம் என்ன? கேட்டால் மிக எளிதான பதிலே வரும் , இனக்குழுக்கள் நடுவிலான அவநம்பிக்கை. அந்த அவநம்பிக்கை எப்படி வந்தது? ஆயுதத்தால்தான். அந்த ஆயுதத்தை இரு தரப்புக்கும் தயாரித்து வழங்கும் நாடுகளிடம்தான் நாம் நியாயம் கோரி கூக்குரலிடுகிறோம்.
நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம்  என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
ஆப்ரிக்கா உள்நாட்டுப்போர்களால் அழியத்தான் வேண்டுமா? இனக்குழுக்கள் எல்லாம் தனிநாடுகளாக பிரியும் உரிமைக்காக அடித்துக்கோட்னு ஆயிரக்கணக்கில் செத்தொழியத்தான் வேண்டுமா? அந்த அவநம்பிக்கைகளைக் க¨ளைய வழிகளே இல்லையா என்ன? அந்த வழிகளை கண்டடையவே முடியாதா? ஐரீஷ் விடுதலைப்போரும் ஸ்பானிய உள்நாட்டுப்போரும் எல்லாம் என்ன ஆயின? அவையெல்லாம் சமரசபட்டு இன்று ஐரோப்பாவே ஒரே நாடாக அமையும் அளவுக்கு அவர்கள் செல்ல ண்டியும் என்றால் நாம் ஏன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கிக் கொண்டு அழியவேண்டும்?
கண்ணெதிரே ஒரு மாபெரும் முன்னுதாரணம் உள்ளது. அந்த உதாரணம் ஆப்ரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கேதான். பிரம்மாண்டமான ஓர் ஆயுதப்போராடத்தை முன்னெடுத்துச்செல்ல யாருக்காவது ஏதாவது ‘நியாயங்கள்’ இருந்தது என்றால் அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே. கொடுமையான நிற அடக்குமுறை. ஈடிணையற்ற சுரண்டல். மீண்டும் மீண்டும் ஆயுதப்போராடத்துக்கான கட்டாயம் அவருக்கு  ஏற்பட்டது. அவரது கட்சியிலிருந்தே வன்முறைவிரும்பிகள் பிரிந்து சென்றுகொண்டே இருந்தார்கள்.
ஆனால் அவர் காந்தியில் இருந்து கற்றுக்கோண்டிருந்தார். தன் மக்களுக்கு அவர் அளித்தது தங்களை மேம்படுத்திக்கொள்ளும் போராட்டத்தை. அதன்பொருட்டு அவர் தன்னை சிறையிலடைத்துக்கொண்டார். இந்நூற்றாண்டின் மாபெரும் காந்திய போராட்டம் , மாபெரும் சத்யாக்ரகம் என்று  ரோபன் தீவில் மண்டேலா இருந்த இருபத்தேழு வருடத்து சிறைவாசத்தையே சொல்வேன். அவரது சொந்த மக்களை அது அரசியலியக்கத்துக்குக் கொண்டுவந்தது. அவர்களிடையே அது உரையாடலை உருவாக்கியது.
அதைவிட அவரது எதிரிகளின் மனசாட்சியுடன் அது உரையாடலை திறந்தது. மண்டேலாவின் போராட்டத்தில் ஒருகட்டத்தில் உலகமெங்குமிருந்த வெள்ளைய நாடுகள் ஆவேசத்துடன் பங்கெடுத்துக்கொண்டதை நாம் அறிவோம். தென்ஆப்ரிக்கா பெற்ற சுதந்திரம் என்பது படிப்படியாக நடந்த அந்த உரையாடலின் விளைவே. அது ஆப்ரிக்கர்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல, வெள்ளையர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்குமான சுதந்திரம். வன்முறை இல்லாமல் நிகழ்ந்த விடுதலை. நம் கண்ணெதிரே நிகழ்ந்த வரலாறு அது.
                                                                   
மண்டேலாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் திரும்பத்திரும்ப சமரசம்செய்துகோண்டிருந்தார் என்பதையே காண்கிறோம். மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கோண்டிருந்தார். ஆப்ரிக்க தேசிய காங்க்ரஸின் பல்வேறு குழுகக்ளுடன். பல்வேறு உபதேசிய அமைப்புகளுடன். ஸ¥லுக்களுடன். வெள்ளையருடன். அவரது வரலாற்றாசிரியரக்ள் அவரைஒ ‘மாபெரும் சமரசநிபுணர்’ என்று சொல்கிறார்கள்:
ஈழத்தில் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தபோது காங்கோ சிதைந்து விழுந்துகொண்டிருந்தபோது அதே நேரத்தில் அமைதியான தேர்தல் வழியாக ஆப்ரிக்காவில் ஆட்சிக் கைமாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்ததை நாம் தொலைக்காட்சியில் கண்டோம். நாம் கற்றுக்கொள்ளத் தயங்கும் பாடங்கள் அங்கே அரங்கேறின.
நெல்சண் மண்டேலா ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இன்னொரு ரவாண்டா. இன்னொரு காங்கோ. ஆனால் இன்னும் நான்குமடங்கு பெரியது. மானுடம் கண்ட மாபெரும் உதிரவெள்ளம் அங்கே ஓடியிருக்கும். ஆப்ரிக்காவின் முதல் பல் இன தேர்தல்கள் முடிந்து நெல்சன் மண்டேலா பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நான் தொலைக்காட்சியில் கண்டதை நினைவுறுகிறேன். ஜூலு மக்கள் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகக்கூடும் என்ற அச்சத்தால் தெருக்களில் ஆயுதங்களுடன் திரண்டார்கள்.னந்த அச்சம் எவரால் ஏன் உருவாக்க்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வெறிக்கூச்சல்களை தொலைக்காட்சியில் கண்டு நான் அதிர்ந்து இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். ஆப்ரிக்கநாடுகளின் வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு மாபெரும் ரத்தக்களரி ஆரம்பமாகிறதென்றே எண்ணினேன்.
ஆனால் தன் காந்திய ஆயுதத்தால் அந்த நெருக்கடியை வென்றார் மண்டேலா. ஜூலு தலைவர்களுடன் திறந்த மனத்துடன் அதிகாரப்பகிவுக்கு ஒப்புக்கொண்டார். தன் தியாகம் மூலம் இணையற்ற பொறுமை மூலம் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பொன்னாக மாற்றினார். போர்களின் இருள்சூழ்ந்த ஆப்ரிக்கக் கண்டத்தில் தென்னாப்ரிக்கா மட்டும் ஜனநாயகத்துடன் எஞ்சுவது அதனாலேயே.
காந்திய வழிமுறைகளின் நிரந்தர வெற்றிக்கும் சமகால முக்கியத்துவத்துக்கும் நம் கண்ணெதிரில் உள்ள சான்று இது. ஆயுதவழிமுறைகளின் நிச்சயயான தோல்விக்கும் அவை உருவாக்கும் பேரழிவுக்கும் சான்றுகள் என ஆயுதம் ஏந்திய எல்லா போராட்டங்களையும் சொல்லலாம். ஆனாலும் நாம் வெறுப்பாளர்களின் வசைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களின் வெறுப்புதான் ஆயுதத்தை நாடுகிறது. அந்த வெறுப்புடன் ஓயாது உரையாடுவோம். கைகுலுக்க எப்போதும் கரங்களை நீட்டிக்கொண்டே இருப்போம்.



Gupta Empire

Capital: Pataliputra
Language: Sanskrit
Religion: Hinduism and Buddhism 


Government Monarchy
- 240s–280s Sri-Gupta
- 319–335 Chandragupta I
- 540–550 Vishnugupta

Historical era Antiquity
- Established CE 320
- Disestablished CE 600s

Today part of
- India
- Pakistan
- Bangladesh
- Myanmar
- Nepal
                                                             
                                                      
 The Gupta Empire was an ancient Indian empire which existed approximately from 320 to 550 CE and covered much of the Indian Subcontinent. Founded by Maharaja Sri-Gupta, the dynasty was the model of a classical civilization.
                                                               
The peace and prosperity created under leadership of Guptas enabled the pursuit of scientific and artistic endeavors. This period is called the Golden Age of India and was marked by extensive inventions and discoveries in science, technology, engineering, art, dialectic, literature, logic, mathematics, astronomy, religion and philosophy that crystallized the elements of what is generally known as Hindu culture.

Chandragupta I, Samudragupta the Great, and Chandragupta II the Great were the most notable rulers of the Gupta dynasty.

The high points of this cultural creativity are magnificent architecture, sculptures and paintings. The Gupta period produced scholars such as Kalidasa, Aryabhata, Varahamihira, Vishnu Sharma and Vatsyayana who made great advancements in many academic fields.

Science and political administration reached new heights during the Gupta era. Strong trade ties also made the region an important cultural center and set the region up as a base that would influence nearby kingdoms and regions in Burma, Sri Lanka, Malay Archipelago and Indochina.
  
The earliest available Indian epics are also thought to have been written around this period. The empire gradually declined because of many factors like the substantial loss of territory and imperial authority caused by their own erstwhile feudatories and the invasion by the Huna peoples from Central Asia.

After the collapse of the Gupta Empire in the 6th century, India was again ruled by numerous regional kingdoms. A minor line of the Gupta clan continued to rule Magadha after the disintegration of the empire. These Guptas were ultimately ousted by Vardhana ruler Harsha Vardhana, who established an empire in the first half of the 7th century.

Wednesday 30 November 2011

Flute

The flute is a musical instrument of the woodwind family. Unlike woodwind instruments with reeds, a flute is an aerophone or reedless wind instrument that produces its sound from the flow of air across an opening. According to the instrument classification of Hornbostel-Sachs, flutes are categorized as edge-blown aerophones.
A musician who plays the flute can be referred to as a flute player, a flautist, a flutist, or less commonly a fluter.
Aside from the voice, flutes are the earliest known musical instruments. A number of flutes dating to about 40,000 to 35,000 years ago have been found in the Swabian Alb region of Germany. These flutes demonstrate that a developed musical tradition existed from the earliest period of modern human presence in Europe.
        
History
The oldest flute ever discovered may be a fragment of the femur of a juvenile cave bear, with two to four holes, found at Divje Babe in Slovenia and dated to about 43,000 years ago. However, this has been disputed. In 2008 another flute dated back to at least 35,000 years ago was discovered in Hohle Fels cave near Ulm, Germany. The five-holed flute has a V-shaped mouthpiece and is made from a vulture wing bone. The researchers involved in the discovery officially published their findings in the journal Nature, in August 2009. The discovery is also the oldest confirmed find of any musical instrument in history.
The flute, one of several found, was found in the Hohle Fels cavern next to the Venus of Hohle Fels and a short distance from the oldest known human carving On announcing the discovery, scientists suggested that the "finds demonstrate the presence of a well-established musical tradition at the time when modern humans colonized Europe". Scientists have also suggested that the discovery of the flute may help to explain "the probable behavioural and cognitive gulf between" Neanderthals and early modern human.
A three-holed flute, 18.7 cm long, made from a mammoth tusk (from the Geißenklösterle cave, near Ulm, in the southern German Swabian Alb and dated to 30,000 to 37,000 years ago) was discovered in 2004, and two flutes made from swan bones excavated a decade earlier (from the same cave in Germany, dated to circa 36,000 years ago) are among the oldest known musical instruments.
Categories of flute
- The Western concert flutes
- The Indian bamboo flute
- The Chinese flute
- The Japanese flute


Tuesday 29 November 2011

ஜெயமோகன் கேள்வி-பதில்கள்

நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.
தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம்.
நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன். சமயம் வாய்க்கும் போதெல்லாம் சர்ச்சுக்கு செல்கிறேன். ஆனால் சமீப காலமாக என்னுள் சில மாற்றம். சொல்லத் தெரியவில்லை. பிரபஞ்சம் என்றால் என்ன? எப்படி உருவானது? திருமறையில் (பைபிள்) சொல்லக்கூடிய படைப்பின் வரலாறு உண்மை தானா? உண்மையிலேயே சொர்க்கம் என்பது உண்டா? சிந்திக்கத் தொடங்கினேன். விடை தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் சர்ச்சுக்கு சென்று வருகிறேன். நான் அறிந்தும் கேட்டும் வாசித்தும் இருக்கிற இந்து புராணகதைகளும் நம்ப முடியவில்லை. தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகம் வாசித்த பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மொத்தத்தில் எனக்குக் கடவுள் என்ற தத்துவம் உண்டா? என்று வினவத் தோன்றுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் என் மனது சஞ்சலப்படுகிறது. எதையோ தேடுகிறதுபோல் இருக்கும். எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது. நான் திரும்பவும் ஏசுவைப்பிரார்த்திக்கிறேன். பரவசமடைகிறேன்.
இப்பொழுது தாங்கள் ஆன்மீகத்தை வேறுவிதமாகக் கூறிவருவதை கவனித்துவருகிறேன். இன்னும் முழுமையாகப் புரியவில்லை.


நான் ஆன்மீகம் பற்றி பல தளங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். அவற்றை தொடர்ந்து கவனித்து உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளும்போதே நான் சொல்வதென்ன என்பதை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆன்மீக விஷயத்தில் ஏன் இந்தச்சிக்கல் என்றால் நாம் சிறுவயதிலேயே ஆன்மீகம் சார்ந்த பலவற்றை நம்மையறியாமலே கற்று நம்பி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். ஆகவே நாம் புதியதாகக் கற்கும் எதுவும் ஏற்கனவே கற்கப்பட்டவற்றை அழித்து அங்கே தன்னை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சில அடிப்படை விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆன்மீகம், கடவுள், மதம் மூன்றையும் நாம் ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இளமையில் நமக்களிக்கப்படும் சித்திரம் அதுவே. ஆனால் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவற்றைத் தனித்தனியாக வரையறைசெய்துகொள்வதே சரியான புரிதலை உருவாக்கும்.
ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை, மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி. முழுமைநோக்கு அல்லது சாராம்சநோக்கு என அதை விளக்கலாம்.
இந்திய மதங்களில் ’இதம்’ என்ற சொல் முக்கியமானது. ’இது’ என அச்சொல்லுக்கு அர்த்தம். இதெல்லாம் என்ன, இதெல்லாம் ஏன், இதெல்லாம் எவ்வாறு என்ற வினாக்களுக்கான பதில்தேடலே ஆன்மீகம்.
கடவுள் என்பது அந்தத் தேடலில் நம் முன்னோரால் கண்டடையப்பட்டு நமக்களிப்பட்டுள்ள ஒரு பதில் மட்டுமே. அந்தப் பதிலானது கடவுள் என ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் உண்மையில் அது பலவகையாக விளக்கப்படுவது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய ஓர் ஆளுமை அல்லது இருப்பு’. இஸ்லாமுக்கும் அப்படித்தான்.
இந்து மரபின் அடிப்படையாக உள்ள கடவுள் உருவகம் பிரம்மம். பிரம்மம் என்றால் இந்த முடிவற்ற பிரபஞ்சத்துக்கு எது மூலகாரணமாக உள்ளதோ அது. இந்தப் பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. அந்த மூலகாரணம் எப்படிப்பட்டது என்று அறியவோ விளக்கவோ முடியாது.
ஆனால் இப்பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் இன்னொரு வடிவம் என்பதனால் இதில் உள்ள எல்லாமே அதுதான். அதாவது மோர் என்பது உண்மையில் பால்தானே? ஆகவே இப்பிரபஞ்சத்தை, இதில் உள்ள எல்லாவற்றையும் அந்த மூலகாரணமாக எண்ணலாம். ஒரு மரமோ, மிருகமோ , பாறையோ , புயலோ, மழையோகூட அதன் தோற்றமே.இங்குள்ள அன்பு கருணை வீரம் எல்லாமே அதன் தோற்றமே
இவ்வாறு இந்து மரபு பல்வேறு கடவுள்களை உருவகித்துக்கொண்டது. எங்கெல்லாம் நம்மை நம் அன்றாடப் பார்வைக்கு அப்பால் பார்க்கச்செய்யும் ஒரு பிரம்மாண்டம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கடவுளைக் கண்டது. இவை இருவகை. பொருட்கள், கருத்துக்கள். ஆயிரம் விழுது பரப்பிய ஓர் ஆலமரம் பொருள்வடிவமான கடவுள் என்றால் ஒரு அகோர வீரபத்ரர் வீரம் என்ற விழுமியத்தின் வடிவமான கடவுள். ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற பெருங்கடவுள்கள் பற்பல விழுமியங்களைத் தொகுத்து உருவகித்த ஒட்டுமொத்த வடிவங்கள்.
ஆனால் அவை எல்லாவற்றையும் பிரம்மம் என்றுதான் இந்து மரபு சொல்லும். அறியமுடியாத பிரம்மத்தை இந்த அறியக்கூடிய வடிவத்தில் வழிபடுகிறோம் என்று அதற்குப்பொருள். இந்த விஷயத்தைக் குறியீடுகள் மூலம் விளக்குபவைதான் புராணங்கள்.
பௌத்தம் கடவுள் என்றால் பிரபஞ்சத்தை இயக்கும் முழுமுதல் நெறி அல்லது விதி என்று உருவகித்து அதை மகாதர்மம் என்ற சொல்லால் குறிப்பிட்டது.அதன் வடிவமாக புத்தரின் உடலை பிற்காலத்தில் உருவகித்துக்கொண்டார்கள்.
இந்த ’கடவுள்’ என்ற கருதுகோள் நமக்கு ஏன் தேவையாகிறது? மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக.
1. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் முன்பின் தொடர்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிறப்பு இறப்பு நோய் இழப்பு மகிழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே நமக்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது
கடவுள் என்ற உருவகம் இதைப்பற்றிய பதற்றத்தை தீர்க்க உதவுகிறது. வாழ்க்கையை கடவுளை வைத்து எளிமையாக வகுத்துக்கொள்ளமுடியும். கடவுள் என்பது எளிமையான திட்டவட்டமான விடை. மானுட வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் அந்த உருவகம் அளிக்கிறது
2. மனிதன் அன்பு,பாசம், கருணை, தியாகம், ஒழுக்கம் போன்ற பல நற்பண்புகளையும் பல்வேறு அறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இந்தப் பண்புகளும் அறங்களும் சீரான சமூகச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. கடவுள் என்ற உருவகம் இந்த எல்லா நற்பண்புகளையும் அறங்களையும் தொகுத்துக்கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. ‘அன்பே சிவம்’ ‘ஏசு அன்பாக இருக்கிறார்’ போன்ற வரிகள் இதையே குறிக்கின்றன
இந்தப் பண்புகளையும் அறங்களையும் நம் மனத்திலும் சமூக மனதிலும் நிலைநாட்ட கடவுள் என்ற உருவகம் உதவுகிறது. கடவுள் பக்தி என்பது சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த அறங்கள் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கை என்றுதான் அர்த்தம் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்
3. மனிதனுக்கு இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு தனிமை உணர்ச்சி உள்ளது. ஆகவே அவனுக்கு தலைக்குமேலே அவனை பார்க்கக்கூடிய அவனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தந்தை, அல்லது எஜமான், அல்லது அரசன் அல்லது அளவிடமுடியாத ஆற்றல் தேவையாகிறது. அதாவது மனிதனுக்கு வேண்டிக்கொள்ளவும் மன்றாடவும் புகார்செய்யவும் ஒரு இடம் தேவை. கடவுள் அந்த இடம்.
கடவுள் உண்டா இல்லையா என்பது பொத்தாம்பொதுவான கேள்வி. எந்தக் கடவுள், எப்படிப்பட்ட கடவுள் என்பதே இன்னும் குறிப்பான கேள்வி. அத்துடன் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் ஒரு அலகிலா ஆற்றல் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது ஆன்மீகமான கேள்வி. அதை ஆன்மீகதளத்தில் எழுப்பிக்கொள்ளலாம். அதைக் கடவுளுடன் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.
நடைமுறை வாழ்க்கையில் கடவுள் உங்களுக்கு எதற்காகத் தேவைப்படுகிறார் என்பதே இன்னும் முக்கியமானது. உங்களுக்கு ஏசு எதற்காகத் தேவைப்படுகிறார்? உங்கள் மனதில் ஏசு உயர் பண்புகளுக்கும் அறத்துக்கும் வடிவமாக இருக்கிறார் என்று கொள்வோம். ஏன் அவர் உண்டா இல்லையா என்று நீங்கள் விவாதிக்கவேண்டும்? அந்தப் புராணக்கதைகள் உண்மையா பொய்யா என ஏன் நினைக்கவேண்டும்.
பண்புக்கும் அறத்துக்கும் வடிவமான ஏசுவைப் பணிந்து அவர்முன் கண்னீருடன் மண்டியிடுவதில் என்ன நஷ்டம்? உங்கள் ஆன்மாவில் அவர் அன்பையும் பண்பையும் தியாகத்தையும் நிறைக்கிறார்தானே?ஆகவேதான் தேவாலயத்தில் பிரார்த்தனைசெய்தால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்.அந்த நிறைவை நீங்கள் இழக்க வேண்டியதில்லை.
ஒரு எளிய லௌகீகனாக உங்கள் அச்சங்களைக் களையவும் உங்கள் துயரங்களை இறக்கி வைக்கவும் உங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுவார் என்றால் அந்தக் கடவுளிடம் அதைச் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை. தேவாலயத்தில் அதை செய்யலாம்.
கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்துவிட்டுதான் இதையெல்லாம் செய்வேன் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இந்தக் கடவுள் உருவகம் உங்களுக்கு எதை அளிக்கிறது என்பதே முக்கியம்.
கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.
அந்த சமூக அமைப்பு உங்களுக்கு ஒரு சமூகவாழ்க்கையை வாழ உதவுகிறது என்றால் அதில் இயல்பாக நீடிப்பதே சரியானது. அந்தச்சடங்குகள் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான புற அடையாளமும் வாழ்க்கைநெறியும் உருவாகிறது என்றால் அதைக் கடைப்பிடிப்பதிலும் பிழை இல்லை. உங்கள் குடும்பம் அதில் இயல்பாக வாழ்கிறது என்றால் அதை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதே விவேகம்.
ஆன்மீகமான தேடலைக் கடவுள் மதம் இரண்டுக்கும் அப்பால் வைத்துக்கொள்ளவும். அது மிகமிக அந்தரங்கமானது. ஒரு குரு அமைந்தால் அவரிடமன்றி எவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. அதைப் புறவயமாக விவாதிக்கக் கூடாது.
ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.
ஆன்மீகத்தை ஒரு தூய மெய்த்தேடலாக , மத அடையாளம் அற்றதாக, அந்தரங்கமானதாக வைத்துக்கொள்வதே நல்லது. ஆன்மீகதளத்தில் நீங்கள் இந்துவோ கிறித்தவனோ அல்லாமல் ஒரு தூய மானுடப்பிரக்ஞையாக மட்டுமே இருப்பதே ஒரே வழி. அந்நிலையில் எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும் உங்களுக்கு ஒன்றே.
அப்படி நீங்கள் தேடினால் பைபிளையே மதம், கடவுள் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆன்மீகநூலாக வாசிக்கலாம். ஏசுவை மனிதகுமாரனாக அல்லாமல் மகத்தான ஞானகுருவாக அணுகலாம்.அதற்கான எல்லா வழிகளும் அதற்குள் உள்ளன.

Mysore Palace

Name: Mysore palace
Built:
1912
Architect:
Henry Irwin
Architectural style:
Indo-Saracenic
The Palace of Mysore is a palace situated in the city of Mysore in southern India. It is the official residence of the Wodeyars - the erstwhile royal family of Mysore, and also houses two durbar halls (ceremonial meeting hall of the royal court).
Mysore is commonly described as the City of Palaces, however, the term "Mysore Palace" specifically refers to one within the old fort. The Wodeyar kings first built a palace in Mysore in the 14th century, it was demolished and constructed multiple times.
The current palace construction was commissioned in 1897, and it was completed in 1912 and expanded later around 1940.

Mysore palace is now one of the most famous tourist attractions in India after Taj Mahal with more than 2.7 million visitors. Although tourists are allowed to visit the palace, they are not allowed to take photographs inside the palace.
Price of admission for foreign tourists is 200 INR., and for Indians 20 INR. All visitors must remove their footwear to enter the palace.
The regent of Mysore, Maharani Vani Vilas Sannidhna, commissioned a British architect, Henry Irwin, to build yet another palace in its place. The construction was completed in year 1912.
But slowly the beautification of the fort was also taken up and the inhabitants of the fort were slowly shifted out to newer Extension built outside. The present Public Durbar Hall wing was also added much later around 1940.
Temples
  The palace complex includes twelve Hindu temples. The oldest of these was built in the        14th century, while the most recent was built in 1953.
Some of the more famous temples are:
Someshvara Temple

Lakshmiramana Temple

Shwetha Varahaswamy Temple

Monday 28 November 2011

நெடுநல்வாடை (பத்து பாட்டுகளில் ஏழாவது )

Netunalvatai, is a Tamil poetic work in the Pathinenmaelkanakku anthology of Tamil literature, belonging to the Sangam period corresponding to between 100 BCE – 100 CE. "Netunalvatai" is part of the Pattupattu collection, which is the oldest available collection of long poems in Tamil literature.
Netunalvatai contains 188 lines of poetry in the akaval meter. The poet Nakkirar wrote Netunalvatai. Netunalvatai poems belong to the Akam, or subjective themes of love and human relationships and utilises the location of the story to spins a vivid picture of the ancient Tamil country. Netunalvatai contains descriptions of the palace of the Pandya king Nedeunchezhiyan.

 Nature of Netunalvatai
The story of Netunalvatai is about the heroine who prays to the goddess for the return of her lover from the battlefield. Seeing the suffering of the heroine, her maids in the palace also pray to the goddess for the hero to quickly win the battle and return home to their mistress.
Meaning of Netunalvadai
Netunalvatai in keeping with its name, has the theme of the vatai, or cold breeze. The two adjectives netu and nal to the vatai breeze mean bad and good. The same breeze is at the same time is bad to the heroine who languishes in the palace and increases her suffering, at the same time, the breeze causes the hero to do good by conversing and consoling his suffering troops.

San Thome Basilica Church

Name: San Thome Basilica
Location:
Chennai, Tamil Nadu
Country:
India
Denomination:
Roman Catholic
Website:
www.santhomebasilica.com
History
Former name:
San Thome Church
Dedication:
St. Thomas
Relics held:
Bone of St. Thomas
San Thome Basilica is a Roman Catholic (Latin Rite) minor basilica in Santhome, in the city of Chennai, India. It was built in the 16th century by Portuguese explorers, and rebuilt again with the status of a cathedral by the British in 1893. The British version still stands today. It was designed in Neo-Gothic style, favoured by British architects in the late 19th century.
 History
Christian tradition holds that St. Thomas arrived in Kerala from Israel in 52 A.D. preached between 52 A.D. and 72 A.D., when he was martyred on St. Thomas Mount. The basilica is built over the site where he was believed originally to be interred.
San Thome Basilica is the principal church of the Madras-Mylapore Catholic Archdiocese. In 1956, Pope Pius XII raised the church to the status of a Minor Basilica, and on February 11, 2006, it was declared a national shrine by the Catholic Bishops' Conference of India. The San Thome Basilica is a pilgrimage centre for Christians in India. The church also has an attached museum.


Nagesh- The Actor

Name: Nageswaran C. Krishna Gundu Rao
Born:
September 27, 1933(1933-09-27), Dharapuram, Erode district, Madras Presidency,India
Died:
January 31, 2009(2009-01-31) (aged 75), Chennai, Tamil Nadu, India
Occupation
: Film actor
Years active:
1958- 2009
Spouse:
Regina
Children:
Ramesh Babu, Rajesh Babu, Anand Babu
Awards:

1974 Kalamamani
1994 Nammavar Tamil Nadu State Government Award
Nagesh (born C. Krishna Rao Gundu Rao; 27 September 1933 – 31 January 2009), was a Tamil film actor, mostly remembered for his roles as a comedian during the 1960s. He is regarded as one of the most prolific comedians in Tamil cinema.
 Nagesh was born in a Kannada family from Dharapuram, Erode. He was educated in Madras and worked as a clerk in the Indian Railways before entering Tamil film industry.He acted in over 1,000 Indian films from 1958 to 2008, performing in variety of roles as comedian, lead roles, supporting actor and antagonist. He died on 31 January 2009.
In a stark contrast to the comic roles he performed, Nagesh's personal life was wrought with suffering. After losing his father at an early age, Nagesh had to endure a weak financial situation and family ostracism which plagued him throughout his life.
The film Server Sundaram, a rags to riches story in which Nagesh plays the lead role, is believed to be roughly based on the real life story of the actor.Despite being primarily a comedian, Nagesh was rated highly as a character actor by his peers. Nagesh's style of comedy was largely inspired by Hollywood actor Jerry Lewis. Similarities between Nagesh and Lewis earned Nagesh the sobriquet "Jerry Lewis of India".

Wednesday 23 November 2011

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்

"அத யோக அனு சாசனம்”
[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .
பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே...] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.
அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.
ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை  அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து  அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.
பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.
சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.
சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம்.  இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.
அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.  ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்
ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி  ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.
இவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்
சூத்திரம் இரண்டு
” யோக: சித்த விருத்தி நிரோத: “
[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]
பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.
ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.
இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.
இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.
ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி?
மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி  இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ”  என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.
அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?
யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.
இது நம் மூலநூல்களில் பலவற்றின்  முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .
யோகம் என்றால் என்ன? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே  சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.